தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து அதில் வெற்றியும் கண்டவர் தான் எம்.ஜி.ஆர். இவரது டெட்க்காக பலர் காத்திருந்த காலங்களில், ஒரு இயக்கனரின் டெட்டுக்காக இவரை காக்க வைத்துள்ளது ஏ.வி.எம். நிறுவனம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சிறுவயதில் நாடக நடிகராக அறிமுகமாகி பின்னாளில் தனது திறமையின் மூலம் பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அதன்பிறகு அரசியல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அந்த காலக்கட்டத்தில் பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை ஏ.வி.எம்.நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், படத்தின் வெற்றி விழாவுக்கு, எம்.ஜி.ஆர் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் டேட் கேட்டுள்ளனர். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் அடுத்த வாரமே ஒரு நாளில் விழா வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் கொடுத்த நாளுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்ததால், ஒரு மாதத்திற்கு பிறகு விழாவை நடத்தும் வகையில் தேதியை மாற்றி கொடுக்குமாறு எம்.ஜி.ஆரிடம் கேட்டுள்ளனர். இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஏன் என்று கேட்க, எங்கள் விழா அனைத்திலும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தான் நன்றியுரை வழங்குவார். இப்போது அவர் கண் ஆப்ரேஷன் செய்துகொண்டு ஓய்வில் இருப்பதால் அவரால் வர முடியாது. ஒருமாதம் கழித்து விழா நடத்தினால் அவர் வர வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் எல்லோரும் எனக்காக காத்திருப்பார்கள் நான் ஒரு இயக்குனருக்காக காத்திருக்க வேண்டுமா சரி என்று கூறிவிட்டு டேட்டை மாற்றி கொடுத்துள்ளார். அவர் குறித்த நாளில் விழா நடக்க எஸ்.பி.முத்துராமன் நன்றியுரையை வழங்கியுள்ளார். ஏ.வி.எம்.தயாரித்த பல படங்களை குறிப்பாக ரஜினி கமல் நடித்த படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“