எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தயாரிப்பாளர்கள் அனைவரும் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது எம்.ஜி.ஆரை நம்பி பணம் கொடுத்த சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆரிடம் கோவிலுக்கு குண்டு வைப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிக படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை பெற்றவர் சின்னப்ப தேவர். 1956-ம் ஆண்டு வெளியான தாய்க்கு பின் தாரம் என்ற படம் தான் இவர்கள் இருவரும் இணைந்த முதல் படம். இந்த படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவர் இருவரும் சில வருடங்கள் பேசாமல் இருந்தனர்.
அதன்பிறகு 1961-ம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே படத்தின் மூலம் இருவரும் இணைந்தனர். இந்த படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு சென்றதற்கு பின் நடிப்பில் இருந்து விலகும்வரை சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே தயாரித்து வந்தார். இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், எம்.ஜி.ஆர் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுகவில் இருந்தாலும், சின்னப்ப தேவருக்காக மருதமலை முருகன் கோவில்ல விளக்கு ஏற்றியுள்ளார்.
அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், சின்னப்ப தேவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடிப்பில் பல ஹிட் படங்களை தயாரித்து வந்தார். இந்த நேரத்தில், 1967-ம் ஆண்டு எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கழுத்தில் இருக்கும் குண்டை வெளியில் எடுத்தால் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது.
இதன் காரணமாக எம்.ஜி.ஆர் மீண்டும் நடிக்க வருவது சந்தேகம் தான். அப்படியே வந்தாலும் அவரால் முன்புபோல் பேச முடியாது என்று நினைத்த தயாரிப்பாளர்கள் பலரும் எம்.ஜி.ஆரின் அண்ணன், சக்ரபாணியிடம், கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கேட்க தொடங்கினர். இந்த நேரத்தில், ரூ10 லட்சத்துடன் எம்.ஜி.ஆரை பார்க்க மருத்துவமனைக்கு வந்த சின்னப்ப தேவர், முருகா நீங்கள் குணமாகிவிடுவீர்கள். இது அட்வான்ஸ் இதை வைத்து மருத்துவ செலவை பாருங்கள். அடுத்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், நீங்கள் இரவோடு இரவாக மருதமலை முருகனுக்கு விளக்கு ஏற்றினர்கள். அந்த முருகன் உங்களை கைவிட மாட்டான். அப்படி எதாவது நடந்தால் உங்கள் கழுத்தில் குண்டு வைத்தார்கள். நான் மருமலை கோலிலுக்கே குண்டு வைத்துவிடுவேன் என்று சொல்லி, யாருக்கும் தெரியாமல் எம்.ஜி.ஆரை மருதமலை முருகன் கோவிலுக்கு அழைத்து சென்ற சின்னப்ப தேவர், கடவுளை வணங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“