/indian-express-tamil/media/media_files/5OQ3nUVW8czyijhq67WG.jpg)
சிவாஜி படத்தில் நடித்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் ஹோட்டலில் தனி அறை புக் செய்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளரை எம்.ஜி.ஆர் கடுமையாக தாக்கியுள்ளார்.
1960-70 கால்கட்டத்தில் கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த தருணம். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் மஞ்சுளா இணைந்து நடித்த இதய வீனை படத்தின் பாடப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுள்ளது. அதேபோல், சிவாஜி ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த சித்ரா பௌர்னமி படத்தில் படப்பிடிப்பும் நடந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஜெயலலிதாவுக்கு தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அறை பிடிக்காத ஜெயலலிதா இதை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் ஜெயலலிதாவுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் அறை புக் செய்து கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து செய்தி சேகரிப்பதற்காக காஷ்மீர் அழைத்து செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களில் ஒருவர், எம.ஜி.ஆர் மஞ்சுளாவுடன் நடிக்கிறார். ஆனால் ஜெயலலிதாவுக்கு எதற்காக அறை புக செய்து தர வேண்டும் என்று கேள்வி எழுப்பும் வகையில் எழுதியுள்ளார்.
இதை பார்த்த எம்.ஜி.ஆருக்கு சற்று கோபம் அதிகரித்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவர் வாஹினி ஸ்டூடியோவில், இருந்தபோது அந்த பத்திரிக்கையாளரை பார்த்த எம்.ஜி.ஆர் அவரிடம் பேசிக்கொண்டே தனது மேக்கப் அறைக்கு அழைத்து சென்று. தர்மஅடி வெளுத்து வாங்கியுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் கண்ணதாசனின் உறவினர் என்பதாலும், அப்போது கண்ணதாசன் எம்.ஜி.ஆருடன் மோதலில் இருந்ததாலும் உடனடியாக கண்ணதாசனிடம் சென்றுள்ளார்.
இந்த விஷயத்தை கேள்பிப்பட்ட கண்ணதாசன், அவரிடம் நீ என்ன பண்ண என்று கேட்க அவர் நடந்ததை கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு தனி அறை கொடுத்தால் அது அவரின் தனிப்பட்ட விஷயம். இதை நீங்கள் எதற்காக பெரிதாகட்கினீர்கள் என்று கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் சொன்னது சரிதான என்பது போல் அவரிடம் பேசி அனுப்பியுள்ளார். மோதிலில் இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் கண்ணதாசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.