தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஒரு எழுத்தாளரின் பேச்சுக்கு பதில் சொல்ல எழுந்துள்ளார். அப்போது அவர் முகத்திற்கு நேராக உங்களுக்கான நேரம் வரும்போது பேசுங்கள் இப்போது அமருங்கள் என்று கூறியுள்ளார். யார் அந்த எழுத்தாளர்?
சிறுவயதில் நாடகங்களில் நடித்து பின்னாளில் தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, அடுத்து நாயகனாக உயர்ந்து தனி கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், முதல்வர் இருக்கையிலும் அமர்ந்து வெற்றிக்கொடியை நாட்டியவர். இவர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் நூலகத்திற்கு வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை 600-ல் இருந்து 200-ஆக குறைக்கப்படுகிறது.
அரசின் இந்த செயல்பாடு பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்க, அப்போது எழுத்தாளராக இருந்த தீபம். நா.பார்த்த சாரதியிடமும் கூறியுள்ளனர். இதை கேட்டு உள் வாங்கிகொண்ட அவர், நா.பார்த்த சாரதி தனக்கான பணிகளை தொடர்ந்துள்ளார். அப்போது ஒருநாள் எம்.ஜி.ஆர் பார்த்தசாரதிக்கு போன் செய்ய, போனை எடுத்த அவரது உதவியாளர் அவர் குளித்துக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.
அதன்பிறகு நா.பார்த்த சாரதி குளித்துவிட்டு வந்ததும், விஷயத்தை சொல்ல, அவரிடம் எம்.ஜி.ஆர் பறறி என்ன நினைக்கற என்று கேட்டுள்ளார்.இதை கேட்ட நா.பார்த்த சாரதி, உதவியாளர், எம்.ஜி.ஆர் மக்களின் மனதை வென்ற வெற்றியாளர் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நா.பார்த்தசாதி, எம்.ஜி.ஆர் உண்மையில் மக்களை வென்ற கவிஞர் என்றால், இன்னும் 10 நிமிடத்தில் அவரே உங்களை அழைப்பார் என்று கூறியு்ளளார்.
அதன்ப, மீண்டும் எம்.ஜி.ஆர் 10 நிமிடங்கள் கழித்து போன் செய்ய, நா.பார்த்த சாரதி போனை எடுக்க, வள்ளுவர் கோட்டத்தில் ஒரு இலக்கிய விழா நீங்கள் வந்த பேச வேண்டும் என்று சொல்கிறார். நீங்கள் அதிமுக நான் காங்கிரஸ் என்னை எப்படி பேச அழைக்கிறீாகள் என்று கேட்க, நீங்கள் இங்கு வந்து அரசியல் பேச வேண்டாம் இலக்கியம் மட்டும் பேசுங்கள் என்று சொல்ல, நா.பார்த்த சாரதி அதற்கு ஒப்பு்கொண்டுள்ளார்.
கூட்டம் தொடங்கியதும் பேச தொடங்கிய நா.பார்த்த சாரதி, தமிழகத்தில் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதை 600-ல் இருந்து 200 ஆக குறைத்துவிட்டார்கள் என்று பேச, இதற்கு பதில் சொல்ல நினைத்து எம்.ஜி.ஆர் எழுந்திருக்கி,, மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பேச வேண்டும் என்றால், உங்களுக்கான நேரம் வரும்போது பேசுங்கள் என்று மகத்திற்கு நேராகவே கூறியுள்ளார்.
முதல்வராகவே இருந்தாலும் ஒருவர் பேசும்போது குறுக்கே பேச கூடாது என்பதும், நா.பார்த்த சாரதி தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் திறன் உடையவர் எனபது தெரிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“