தமிழ் சினிமாவில், வள்ளலாக திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சினிமாவை தாண்டி பலருக்கும் பல உதவிகளை செய்திருந்தாலும், அவர் செய்த ஒரு உதவியை மேடையில் வாங்க மறுத்த ஒரு மூதாட்டி, உன்னை பார்த்துக்கொண்டே இருந்தாலும் அது போதும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வு எங்கு நடந்தது தெரியுமா?
70-களில் வெளியான க்ளாகிச் சினிமாவில், முக்கிய படம் மாட்டுக்கார வேலன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். பி.நீலகண்டன் இயக்கிய இந்த படம் எம்மா தம்மன்னா என்ற கன்னட படத்தின் ரீமேக் ஆகும். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியருந்தனர்.
க்ளாசிக் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவை கொண்டாட நினைத்த படத்தின் தயாரிப்பாளர், கனகசபை, மதுரையில் இந்த விழாவை நடத்த முடிவு செய்து அதன்படி ஒரு தியேட்டரில், இந்த 100-வது நாள் விழாவை நடத்தியுள்ளார். அப்போது தியேட்டர் உரிமையாளர், படம் வெளியானது முதல் இன்று வரை 100 நாட்களும் இந்த படத்தை பார்த்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆச்சரியமடைந்த எம்.ஜி.ஆர் யார் அவர் என்று கேட்க, அந்த தியேட்டர் உரிமையாளர் ஒரு மூதாட்டியை அழைத்து வந்துள்ளார். அந்த மூதாட்டியிடம், எம்.ஜி.ஆர் கேட்க, அவர் தான் கீரை வியாபாரம் செய்வதாகவும், தனக்கு வரும் ரூ3 வருமானத்தில் தினமும் ஒரு ரூபாய் உன்னை பார்க்க செலவு செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஒரு படத்தை ஒருமுறை அல்லது இருமுறை பார்க்கலாம். நீங்கள் இத்தனை முறை பார்ப்பதற்கு என்ன காரணம் என்று கேட்க, படத்தில் நீ இருக்கியே என்று கூறியுள்ளார் அந்த மூதாட்டி.
மேலும் உன் முகத்தை பார்த்தாலே என் கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போய்விடுகிறது என்று சொல்ல, எம்.ஜி.ஆர் அவரது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு உணர்ச்சிப்பொங்கியுள்ளார். அதன்பிறகு, நீங்கள் என்னை தினமும் பார்க்க ரூ100 செலவு செய்திருக்கிறீர்கள். இதற்காக நான் உங்களுக்கு ரூ1000 தருகிறேன் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, வேண்டாம்பா, நீ என் அம்மா மீத அதிக பாசம் வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும் அதேபோல் நான் என் மீது பாசம் வைத்திருக்கிறேன். மகனை பார்க்க ஒரு தாய் பணம் வாங்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதை கேட்டு எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போக வெற்றி விழா மேடை உணர்ச்சிப்பொங்கும் மேடையாக மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“