Advertisment

இந்த 3 சீன்ல செருப்பு... மற்ற சீன்ல ஷூ போட்டுக்கலாம்; சிவக்குமாருக்கு எம்.ஜி.ஆர் வைத்த கண்டிஷன்!

சிவக்குமார் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படத்தில் அவருக்கு முக்கியமான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அது என்ன என்று தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivakumar MGR

எம்.ஜி.ஆர் கொடுத்த முதல் வாய்ப்பை தவறவிட்ட சிவக்குமார், 2-வது வாய்ப்பில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும்போது, அவர் கொடுத்த உத்தரவை தவறாமல் கடைபிடித்துள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் சிவக்குமாரே கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது.

அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு ஏ.வி.எம். தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் முதல்முறையாக இணைந்து நடிப்பதால் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்த சிவக்குமாருக்கு எம்.ஜி.ஆர் அழைத்து தன்னுடன் இணநைது நடிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

சிவாஜி படத்தில் நடித்துக்கொண்டிருந்த்தால், அந்த படத்தில் நடிக்க மறுத்த சிவக்குமார் அடுத்து, காவல்காரன் என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக நடித்திருந்தார். இதுதான் எம்.ஜி.ஆர் – சிவக்குமார் இணைந்து நடித்த முதல் படம்.1967-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி்.ஆர் அண்ணனாகவும், சிவக்குமார் அவரின் தம்பியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக முதலில் சிவக்குமார் வந்தபோது அவரது உயரத்தை அளந்துள்ளார் எம்.ஜி.ஆர்.

பொதுவாக தனது படங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்து முழு விபரங்களையும் தெரிந்துகொண்டு தான் எம்.ஜி.ஆர் வாயப்பு கொடுப்பார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் சிவக்குமாருக்கு வாய்ப்பு கொடுத்தபோது, முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். முதலில் உயரத்தை அளந்த எம்.ஜி.ஆர், இந்த படத்தில் 3 7 மற்றும் 93-வது காட்சியில் நீங்கள் செருப்பு அணிந்துகொண்டு நடியுங்கள். மற்ற காட்சிகளில் ஷூ அணிந்துகொண்டு நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் எதற்காக அப்படி சொன்னார் என்றால், சிவக்குமார் மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம் உள்ளவர்கள். இருவரும் அண்ணன் தம்பியாக நடிப்பதால், ஒரே காட்சியில் தோன்றும்போது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இவர்கள் நடிப்பில் வெளியான காவல்காரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment