எம்.ஜி.ஆருடன் முதல் படத்தில் நடித்தபோது கால்மேல் கால்போட்டு அமர்ந்ததால் நீக்கப்பட்ட நடிகை சவுக்கார் ஜானகி, 2-வது படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர் அவரது உடையை மாற்றிக்கொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளார். அதற்கு காரணம் என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி முண்ணணி நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் சவுகார் ஜானகி. குறிப்பாக, சிவாஜியுடன், உயர்ந்த மனிதன், புதிய பறவை, பாவை விளக்கு, பாலும் பழமும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆருடன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
10 வருட இடைவெளிக்கு பிறகு எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1962-ம் ஆண்டு வள்ளிநாயகம் என்பது தயாரிப்பில், எஸ்.ஏ.சுப்புராமன் இயக்கத்தில் வெளியான மாடப்புறா என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க சவுக்கார் ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது சவுக்கார் ஜானகி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததால், படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1965-ம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தில் சவுக்கார் ஜானகி எம்.ஜி.ஆருடன் மீண்டும் இணைந்து நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பெரிய ஹிட் பாடலான, கண் போன போக்கிலே பாடல் காட்சி படமாக்கும்போது எம்.ஜி.ஆர் திடீரென படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். அந்த காட்சியில் சவுக்கார் ஜானகி அணிந்திருந்த உடை ட்ரான்ஸ்ப்ரண்டாக இருந்துள்ளது. லைட் போட்டால், அசிங்கமாக தெரிவது போல் உள்ளது.
இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்திய எம்.ஜி.ஆர், சவுக்கார் ஜானகியை அழைத்து, பல படங்களில் கவுரவமான கேரக்டர் எல்லாம் பண்றீங்க. இதுவும் நல்ல கேரக்டர் தான். ஆனால் இந்த உடை உங்களுக்கு ரொம்ப ட்ரான்ஸ்ப்ரண்டாக இருக்கிறது. லைட் போட்டால் வெங்காய தோல் மாதிரி தெரிகிறது. இந்த உடை அணிந்து நீங்கள் நடித்தால் மற்ற படங்களில் நீங்கள் பண்ணிக்கொண்டிருக்கும் கேரக்டரில் இமேஜ் கெட்டுப்போய்விடும் என்று கூறி உடையை மாற்றுமாறு கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“