/indian-express-tamil/media/media_files/2025/08/25/mgr-mkt-2025-08-25-19-10-08.jpg)
எம்.ஜி.ஆர் இப்போது இல்லை என்றாலும், அவர் நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இன்றைக்கும் கவனம் ஈர்த்து வருகிறது. அதே சமயம், எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு துணை வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் பற்றி மக்களுக்கு சரியாக தெரிவதில்லை. அந்த வகையில் ஒரு படத்தில் ஹீரோவின் கண்ணை எடுக்கும் ஒரு கொடுரமாக ஆளாக எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்து 3-முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், அரசியலில் தடம்பதித்து முதல்வராக அமர்ந்தார். முதல்வராக இருந்தாலும், நடிப்பின் மீது இருந்த தீராத காதலால், மீண்டும் ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆர் முயற்சித்தார். ஆனால் அரசியல் காரணங்களால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதன்பிறகு அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர் கடைசிவரை முதல்வர் இருக்கையில் அமர்ந்துவிட்டு இறந்துவிட்டார். 1917-ம் ஆண்டு பிறந்த எம்.ஜிஆர் நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். எம்.கே.ராதா நாயகனாக நடித்த இந்த படத்தில், ரங்கையா நாயுடு என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை வேடங்களில் எம்.ஜி.ஆர், 1941-ம் ஆண்டு அசோக் குமார் என்ற படத்தில் நடித்திருந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/25/mkt-and-mgr-2025-08-25-19-10-08.jpg)
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ராஜா சந்திரசேகர் இயக்கியிருந்தார். அசோகர் என்ற மன்னனின் மகன் குணாலன் (எம்.கே.டி). அப்பா அசோகரின் 2-வது மனைவி த்ரிஷ்யரகரசி (கண்ணாம்பா) தனது கணவனின் முதல் மனைவியின் மகனான குணாலன் மீது ஆசைப்படுவார். ஆனால் எம்.கே.டி.நான் உங்களுக்கு மகன் போன்றவர் என்று சொல்லி தவிர்த்து வருவார். ஆனால் கண்ணாம்பா விடுவதாக இல்லை.
ஒருமுறை குணலானை பாலியல் பலாத்காரம் செய்யபோக அதை அசோகர் பார்த்துவிடுவார். ஆனால் கண்ணாம்பா பழியை எம்.கே.டி மீது போட்டுவிட, அசோகரும் எவ்வித விசாரணையும் இன்றி, எம்.கே.டி கண்ணை நோண்டிவிடும்படி உத்தரவிட்டுவிடுவார். இப்போது அந்த தண்டனையை நிறைவேற்ற வருபவர் தான் எம்.ஜி.ஆர். இந்த படத்தில் மகேந்திரன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த பையன் தினமும் ஸ்டூடியோவுக்கு வருகிறான். அவனுக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்க என்று எம்.கே.டி சொன்னதால் எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த கண்ணை நோண்டும் காட்சியில் நாம் மட்டும் நடித்தால் அது சரியாக இருக்காது என்று நினைத்த எம்.ஜி.ஆர். தனக்கு ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு அந்த காட்சியில் நடித்துள்ளார். இந்த தகவலை நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.