Advertisment

அன்பே வா பாடல் பதிவு: எம்.எஸ்.வி ஏ.வி.எம்.-க்கு கொடுத்த எச்சரிக்கை : எம்.ஜி.ஆர் இப்படிப்பட்டவரா?

அன்பே வா படத்தில், முதல் பாடல் பதிவின்போது, எம்.ஜி.ஆர் எப்படி நடந்துகொள்வார் என்பது குறித்து எம்.எஸ்.வி ஏ.வி.எம்.நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Saroja Devi

அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எம்.ஜி.ஆர் நடிப்பில் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ஒரே படமாக அன்பே வா படத்தின் படப்பிடிப்பின்போது பல சுவாரஸ்யமாக நிகழ்வுகள் நடந்துள்ளது. இது குறித்து ஏ.வி.எம் நிறுவனத்தின் குமரன் தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் சரிவை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு தனது திறமையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்இ.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர். யார் தயாரிப்பாளராக இருந்தாலும், தான் நடிக்கும் படங்கள் தொடர்பாக தானே முடிவு எடுக்கும் நிலையில் இருந்தார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர் ஏ.வி.எம். நிறுவனத்தில் நடித்த ஒரே படமான இந்த படத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்ப, கவிஞர் வாலி அனைதம்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பது உறுதியாக முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எம்.எஸ்.வி இசைமைக்க, முதல் பாடலை வாலி எழுதி கொடுத்துள்ளார். இந்த பாடல் பதிவுக்கு தயாராக இருந்தபோது, எம்.எஸ்.வி, ஏ.வி.எம் குமரனிடம் சென்று, இந்த பாடலை ஒருமுறை சின்னவரிடம் (எம்.ஜி.ஆர்) கொடுத்து கேட்க சொல்லுங்கள். நான் இப்போதே உங்களை எச்சரிக்கிறேன். படபிடிப்பு நடக்கும்போது இந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் சொன்னால், பிறகு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியாக ஏ.வி.எம்.சரவணன் மற்றும் குமரன் ஆகிய இருவரும் வாகினி ஸ்டூடியோவில் ஷுட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து, இது பற்றி சொல்ல, யார் பாடல் எழுதியது என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். வாலி தான் எழுதியுள்ளார் என்று சொல்ல, செட்டியார் (ஏ.வி.எம். நிறுவனர்) பாடலை கேட்டுவிட்டாரா என்று எம்.ஜி.ஆர் கேட்க, அவர் கேட்டுவிட்டார். நீங்கள் ஒருமுறை கேட்டுவிட்டார் நன்றாக இருக்கும் என்று ஏ.வி.எம். குமரன் கூறியுள்ளார். செட்டியார் பார்த்து ஓகே சொன்னால் சரிதான் அதன்பிறகு நான் எதற்காக பார்க்க வேண்டும். உங்கள் படம் நீங்கள் நினைத்தபடி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு பாடல் பதிவு நடைபெற்று ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் சென்சாருக்கு போயுள்ளது. இந்த பாடலில், உதய சூரியனின் பார்வையிலே என்ற வார்த்தை மற்றும் சூரியன் உதயமாகும்  காட்சிக்கு சென்சார்போர்டு அனுமதி தர மறுத்துள்ளனர். இதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போது, ஏ.வி.எம்.குமரன், இந்த வார்த்தையை மாற்றிவிடுகிறோம். ஆனால் சூரியன் உதயமாவது இயற்கை அதை ஏன் மாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதன்பிறகு சென்சார் அதிகாரிகள் என்ன வார்த்தை மாற்றப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த வாலி, 3 வார்த்தைகளை எழுதி கொடுக்க அதில் புதிய சூரியனின் பார்வையியே என்ற வார்த்தையை சென்சார் அதிகாரிகளே தேர்வு செய்துகொடுக்க, அந்த சூரிய உதயமான காட்சியை படத்தில் அப்படியே வைத்துக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளனர். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் சமீபத்தில் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment