எம்.ஜி.ஆர் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு பாடல் எழுத கமிட் ஆன ஒரு கவிஞர் பல்லவி வராமல் தவித்தபோது, அவரது மனைவி சொன்ன ஒற்றை வார்த்தையை வைத்து ஒரு பெரிய ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக உயர்ந்தவர். ஒரு கட்டத்தில் படங்கள் வெற்றி பெறாததால், வீழ்ச்சியை சந்தித்த எம்.ஜி.ஆர் பெரிய பொருட் செலவில் ஒரு படத்தை இயக்கி தயாரித்து நடித்திருந்தார். இந்த படம் தான் நாடோடி மன்னன்.
எம்.ஜி.ஆர் பெரிய சோதனை முயற்சிகள் மெற்கொண்ட இந்த படத்தை முதலில் கருப்பு வெள்ளையில் எடுத்து அதன்பிறகு கலர் படமாக எடுத்திருப்பார். முதலில் பானுமதி நாயகியாக நடித்த இந்த படத்தில் இடைவேளைக்கு பின் பானுமதி சாவது போல் காட்டிவிட்டு சரோஜா தேவியை நாயகியாக மாற்றியிருப்பார். இப்படி பல சோதனை முயற்சிகளை மேற்கொண்ட எம்.ஜி.ஆர் பெரிய பொருட் செலவில் எடுத்த படத்திற்காக நிறைய கடன்களை வாங்கியிருந்தார்.
இதனை மனதில் வைத்துக்கொள்ளாத எம்.ஜி.ஆர் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து வந்தார். இதனால் இந்த படம் 2 வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் புரட்சிக்காரரான எம்.ஜி.ஆர் சிறையில் இருக்கும்போது அவருடன் வெளியில் தப்பித்து செல்ல வேண்டும் என்று பானுமதி விரும்புவார். ஆனால் ஒரு பெண்ணுடன் சென்றால், தவறாகிவிடும் என்று நினைக்கும் எம்.ஜி.ஆர் அதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், ஒரு கட்டத்தில் அவருக்கு பாதுகாப்பாக செல்வார்.
Advertisment
Advertisements
அந்த சூழ்நிலைக்கு ஒரு பாடல் வேண்டும் என்றும் இந்த பாடலை எழுத கவிஞர் முத்துகூத்தன் எழுத வருகிறார். ஆனால் அவருக்கு பல்லவி வரவில்லை. இதற்காக யோசித்துக்கொண்டிருக்கும்போது, அவரது மனைவி மாலையில் சினிமா பார்க்க போவோமா என்று கேட்க, அதை கண்டுகொள்ளாமல் இவர் யோசித்துக்கொண்டே இருக்கிறார். இதை பார்த்த அவரது மனைவி, அவரது தோளில் தட்டி, மாலையில் சினிமா பார்க்க போக சம்மதமா என்று கேட்க, இவர் அந்த வார்த்தையை கேட்டு, மகிழ்ச்சியில் அதையே பாடலாக மாற்றியுள்ளார். அந்த பாடல் தான் ‘சம்மதமாக நான் உங்கள் கூட வர சம்மதமர்’ என்ற பாடல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“