தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவர் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தாலும், எம்.ஜி.ஆர் செய்த ஒரு செயலால் இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் பிரிந்து இருந்ததனர் என்பது பலரும் அறிந்த ஒரு தகவல் என்றாலும் இதற்காக காரணம் என்ன என்பது அறியாத தகவல் என்று சொல்லாம்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்.ஜி.ஆர், தனது ஆரம்ப காலத்தில் இருந்தே சின்னப்ப தேவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் அவருக்கு எதாவது கேரக்டர் இருக்கிறது என்றால் உடனடியாக அவரை புக் பண்ண சொல்லிவிடுவது எம்.ஜி.ஆரின் வழக்கம். அதேபோல் கேரக்டர் இல்லை என்றாலும் எதாவது ஒரு காட்சியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிடுவார்.
இப்படி எம்.ஜி.ஆருடன் 20 படங்களுக்கு மேல் நடித்த சின்னப்ப தேவர், சொந்தமாக படம் தயாரிக்க ஆசைப்பட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நல்லதங்காள் என்ற படத்தை தயாரிக்கிறார். துரதிஷ்டவசமாக இந்த படம் வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு ஒரு படத்திற்கு நிதியுதவி செய்கிறார். அந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் சின்னப்ப தேவர் நடித்திருந்தார். ஆனாலும் அந்த படமும் வெற்றியை பெறவில்லை.
தயாரித்த படம், நிதியுதவி செய்த படம் என இரண்டுமே தோல்வியடைந்தாலும், படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சின்னப்ப தேவர், நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று கால்ஷீட் கேட்டுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீங்கள் நான் உங்கள் படத்தில் நடிப்பதாக விளம்பரம் கொடுத்துவிட்டு என்னை சந்தித்திருக்கலாம். யார்ருக்கோ நடித்து கொடுக்கிறேன் உங்களுக்கு நடிக்க மாட்டேனா கண்டிப்பா நடித்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு, தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் தனியாக பட நிறுவனம் தொடங்கிய சின்னப்ப தேவர், தனது தம்பி எம்.ஏ.திருமுகம் இந்த படத்தின் இயக்குனராக ஒப்பந்தமாகிறார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்த இந்த படம் தான் தாய்க்குபின் தாரம். கடந்த 1956-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சின்னப்ப தேவருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. தமிழில் தாய்க்கு பின் தாரம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் உரிமையை நாகி ரெட்டியார் வாங்கியிருந்தார்.
அதன்படி டப் செய்து படம் வெளியாகும்போது எம்.ஜி.ஆர் என் படத்தை எனது குரலை என்னிட்டம் கேட்காமல் எப்படி நீங்கள் டப் செய்யலாம் எனறு சின்னப்ப தேவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன சின்னப்ப தேவர், உடனடியாக நாகி ரெட்டியாருக்கு இது பற்றி சொல்ல, அவர் இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். ஆனாலும் அதன்பிறகு 5 வருடங்கள் எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவர் இருவருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“