Advertisment

இரண்டரை வயதில் தந்தை மரணம்... வறுமையின் பிடியில் எம்.ஜி.ஆர் : நாடக நடிகராக மாறியது எப்படி?

சொந்தக்காரர்கள் ஏளனமாக பேசியதை நினைத்து பார்த்த சத்தியபாமா அம்மையார் கனத்த இதயத்துடன் மகன்களை நாடகத்தில் நடிக்க அனுப்பி வைக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR 1968

எம்.ஜி.ஆர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், இன்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அவரின் ஆரம்பகால வாழ்க்கை கடும் வறுமையின் உச்சத்தில் இருந்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியில், கேரளாவில் நீதிபதியாக பதவியில் இருந்து கோபால் மேனன் என்பவர் மிகவும் நேர்மையான ஒருவராக இருந்துள்ளார். இதனால், அவருக்கு பல சோதனைகள் வர, ஒரு கட்டத்தில் இந்த வேலையே வேண்டாம் என்று விட்டுவிட்டு, கல்லூரி பேராசிரியராக வேலைக்கு சேர்க்கிறார். இந்த வேலை அவருக்கு இலங்கையில் கிடைக்கிறது.

இலங்கையில் சில ஆண்டுகள் அவர் வேலை செய்து வந்தபோது, 1917-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பிறக்கிறார். அவருக்கு இரண்டரை வயது ஆகும்போது, தந்தை கோபால் மேனன் இறந்து போகிறார். எம்.ஜி.ஆருக்கு முன்பு இந்த குடும்பத்தில் 4 பிள்ளைகள் இருக்கின்றனர். தற்போது எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 5 பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சத்யபாமா அம்மையாருக்கு வருகிறது. இதனால் தனது தாய் இல்லமான வடவூருக்கு பிள்ளைகளுடன் வந்துவிடுகிறார்.

தந்தை கோபால் மேனன் இறந்த சோகத்தில், எம்.ஜி.ஆரின் மூத்த அண்ணன், இரண்டு அக்கா என 3 பேரும் மரணமடைந்து விடுகின்றனர். தனது மகள் சத்தியபாமாவின் சொத்துக்களை மீட்பதற்காக போராடிக்கொண்டிருந்த அவரது தாயாரும் ஒரு கட்டத்தில் மரணமடைந்து விடுகிறார். இதன் காரணமாக சத்தியபாமா மகன்கள் சக்ரபாணி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருடனும் கடுமையாக வறுமையில் போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரின் அப்பா கோபால் மேனன் மூலமாக பல உதவிகளை பெற்ற காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற வேலு நாயர் என்பவர் எம்.ஜி.ஆர் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார். இவருக்கு கலையில் ஆர்வம் இருந்ததால், கேரளாவில் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் அவர் கும்பகோணத்தில் இருப்பதால், எம்.ஜி.ஆர் அம்மாவிடம் பேசி, அக்கா நீங்கள் கும்பகோணம் வந்துவிடுங்கள் என்று அழைத்து சென்றுவிடுகிறார்.

கும்பகோணம் வந்தவுடன் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது அண்ணன் சக்கரபாணி ஆகிய இருவரும் தின்னை பள்ளிக்கூடாத்தில் சேர்க்கப்படுகின்றனர். அதே சமயம் குடும்ப வறுமை காரணமாக வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, வேலு நாயர், எம்.ஜி.ஆர் சக்ரபாணி இருவரையும் நாடகங்களில் நடிக்க அழைத்துச்செல்கிறார். வேலு நாயர் வேலை பார்த்த மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் அபிமன்யூ என்ற நாடகத்தை தொடங்குகிறார்கள். அதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆட்கள் தேவைப்படும்போது வேலு நாயர் எம்.ஜி.ஆர் மற்றும் சக்ரபாணியை அழைத்து செல்கிறார்.

சொந்தக்காரர்கள் ஏளனமாக பேசியதை நினைத்து பார்த்த சத்தியபாமா அம்மையார் கனத்த இதயத்துடன் மகன்களை நாடகத்தில் நடிக்க அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு நாடக அரங்கத்தில் பல இன்னல்களை கடந்து எம்.ஜி.ஆர் நடிப்பை கற்றுக்கொண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். எம்.ஜி.ஆரின் குழந்தை பருவமே கடும் கஷ்டங்கள் நிறைந்தது எப்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment