சிறுவயது முதல் நாடக நடிகராக இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் எம்.ஜி.ஆர். 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் சினிமாவில் அறிமுகமானார். ஆங்கல இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இந்த படத்தை இயக்கியிருந்தார். எம்.கே.ராதா, ஞானாம்பாள் இணைந்து நடித்த இந்த படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
சர்மா பிரதர்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். சதிலீலாவதி படத்தில் எம்.ஜி.ஆர் இன்ஸ்பெக்டர் ரங்கையா என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டருக்காக எம்.ஜி.ஆர் சைக்கிளில் செல்ல வேண்டும். ஆனால் அப்போது அவருக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது.இதை தெரிந்துகொண்ட இயக்குனர் எல்லிஸ் ஆர் டங்கன் எம்.ஜி.ஆர் மீது கோபப்பட்டு பேசிவிடுகிறார்
உன்னை என்ன விமானமா ஓட்ட சொன்னேன், சைக்கிள் தானே ஓட்ட சொன்னேன், அதை கூட ஓட்ட தெரியாமல் எப்படி நீ சினிமாவில் நடிக்க வந்த? என்று கடுமையாக பேசிவிடுகிறார். அப்போது அவரே, சின்ன பையனை இப்படி கத்திவிட்டோமே என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டபோது, அங்கிருந்த கிருஷ்ணன் என்பவர் கத்திக்கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர் எடுத்து வந்த சைக்கிள் அவர் ஓட்ட தெரியாமல் கீழே போட்டதால் உடைந்துவிடுகிறது. இதை பார்த்த கிருஷ்ணன் என் சைக்கிள் போச்சு, அது விலை என்ன தெரியுமா என்று கடுமையாக சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த எம்.ஜி.ஆர், அண்ணே சைக்கிள் உங்களுடையது என்று தெரியாது. யூனிட் சைக்கிள் என்று நினைத்துவிட்டேன். சைக்கிள் என்ன விலையே நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு கிருஷ்ணன் சமாதானமாகிறார். அவர் தான் பின்னாளில் வந்த கிருஷ்ணன் பஞ்சு என்ற இரட்டையர்களில் ஒருவரான கிருஷ்ணன். முதல் படத்தில் சைக்கிள் ஓட்ட தெரியாமல் இயக்குனரிடம் திட்டு வாங்கிய எம்.ஜி.ஆர் பின்னாளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழக அரசியலில் நிலையான ஒரு இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் என்ற அந்தஸ்தை பெற்றவர் என்பது பலரும் அறிந்த ஒரு தகவல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil