படப்பிடிப்பு தளத்தில் லைட்மென் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அன்று வான்கோழி பிரியாணி விருந்து வைத்துள்ளார் எம்.ஜி.ஆர். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில், அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில், துணை நடிகராக அறிமுகமாகி, பல தடைகளை கடந்து நாயகனாக மாறிய இவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாரளாக இருந்தாலும், இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல் பல நடிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்த எம்.ஜி.ஆர், கஷ்டம் என்று யார் வந்தாலும், கர்ணனாக மாறி உதவி செய்துவிடுவார். தனது சக நடிகர்கள் கஷ்’டத்தில் இருக்கும்போது அவர்கள் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நோக்கத்துடன், அவர்களுக்கு தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து அவர்களின் கஷ்டத்தை போக்கியவர் தான் எம்.ஜி.ஆர்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்த எம்.ஜி.ஆர், ஆனந்த ஜோதி என்ற படப்பிடிப்பில் இருந்தபோது, ஒரு லைட்மேன் எதேர்ச்சையாக சொன்ன வார்த்தையால் அனைவருக்கும் வான்கோழி பிரியாணி விருந்து வைத்துள்ளார். 1963-ம் ஆண்டு வி.என்.ரெட்டி ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோரின் இயக்கத்தில் வெளியான படம் தான ஆனந்த ஜோதி. எம்.ஜி.ஆர் தேவிகா இணைந்து நடித்த இநத படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள், எம்.ஜி.ஆா மேக்கப் அறையில் இருந்தபோது லைட்மேன் ஒருவரிடம் மறறொருவர் வந்து நல்ல சாப்பிட்டியா என்று கேட்க, அந்த லைட்மேன் இல்லை கேமரமேன் அழைத்ததால் பாதி சாப்பாட்டில் எழுந்து வந்துவிட்டேன் என்ற கூறியுள்ளார். இந்த கேட்ட அந்த நபர் சரி விட மதியம் சேர்த்து சாப்பிடலாம் என்ற சொல்ல, ஆமாம் மதியம் என்ன வான்கோழி பிரியாணியா போட போறாங்க ஒரு கட்டு கட்ட என்ற அந்த லைட்மேன் கேட்டுள்ளார்.
இதை மேக்கப் அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அன்ற மதியம், அனைவருக்கும் வான்கோழி பிரியாணி விருந்து வைத்துள்ளார். ஆனால் அன்று வியாழன் கிழமை என்பதால் எம்.ஜி.ஆர் சைவ சாப்பாடு சாப்பிட்டுள்ளார். அப்போது அவரின் உதவியாளர் வந்து ஏன்னே அந்த லைட் மேன் சொன்னதுக்காக பிரியணி விருந்து வச்சீங்க, அது நீங்க சாப்பிடற நாளா பார்த்து வச்சிருக்கலாமே என்ற சொல்ல, ஒருவன் கேட்கும்போதே கொடுத்துவிட வேண்டும். அதுதான் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.