Advertisment

ஆசையை நிறைவேற்றிய சர்வர் : காலம் கடந்து உதவி செய்த எம்.ஜி.ஆர் ; அந்த சர்வர் யார்?

எம்.ஜி.ஆர் தனது சிறுவயதில் சந்தித்த ஒரு நிகழ்வை கதாசிரியர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Chandra

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்.ஜி.ஆர், இன்றும் மக்கள் மத்தியில் உன்னத தலைவராக போற்றப்பட்டும் நிலையில், கொல்கத்தா சென்றபோது ஒரு ரசகுல்லா வாங்க வழி இல்லாமல் தவித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

நாடக நடிகராக இருந்து சினிமாவில் 2-வது நாயகனாக அறிமுகமாகி பின்னர் நாயகனாக உயர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ரிக்ஷாக்காரன் படத்திற்காக பாரத் பட்டம் பெற்ற இவர், தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் முதல்வராக இருந்து நாட்டிற்கு பல நலத்திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பரத் பட்டம் பெறுவதற்காக கொல்கத்தா சென்று திரும்பிய எம்.ஜி.ஆர், கதாசரியர் ஒருவரிடம் இந்த கொல்கத்தா பயணம், மிகவும் மனநிறைவாக இருந்தது என்று கூறியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று கேட்ட கதாசிரியரிடம், எம்.ஜி.ஆர் தனது சிறுவயது கதையை கூறியுள்ளார். நானும் எனது அண்ணன் சக்ரபாணியும், மாயா மச்சிந்திரா என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா சென்றிருந்தோம்.

அப்போது எங்களுக்கு மாதம் ரூ200 தான் சம்பளம். அதேபோல் அவர்கள் என்ன விரும்புகிறார்களே அதே சாப்பாட்டை தான் எங்களுக்கும் கொடுப்பார்கள். வேறு வழி இல்லாமல் இருந்தோம். அப்போது எனக்கு கொல்கத்தா பிரபலம் ரசகுல்லா சாப்பிட வேண்டும் என்று ஆசை. அப்போது ரசகுல்லா நாளனாதான். அப்போது அந்த பணம் என்னிடம் இல்லை. அப்போது எங்களுக்கு சாப்பாடு பறிமாறிய குல்தீப் என்ற சர்வர் தான் அந்த நாளனா கொடுத்து ரசகுல்லா வாங்கி கொடுத்தார்.

அந்த ரசகுல்லாவை சாப்பிட்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது. கொல்கத்தாவில் பாரத் பட்டம் பெற்று திரும்பியபோது அந்த சர்வர் குல்தீப் நினைவு எனக்கு வந்தது. அப்போது திரும்பி பார்த்தால் அந்த சர்வர் குல்தீப் வயதான தோற்றத்தில் மாலையுடன் நின்றுகொண்டிருந்தார். என் அருகில் வர அவருக்கு தயக்கம் இருந்தாலும் நான் அவரை கட்டி அனைத்துக்கொண்டு எனது அறைக்கு அழைத்து சென்றேன்.

அவரிடம் விசாரித்தபோது அவருக்கு 2 பேர பிள்ளைகள் இருப்பதாக சொன்னார். நான் அவரிடம் பணம் கொடுத்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று சொல்லி அவரின் கையில் அந்த பணத்தை திணித்துவிட்டு வந்தேன். அப்போது தான் என் மனது நிறைவாக இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment