வரிகள் கொடுத்த எம்.ஜி.ஆர்... ஒரு வாரம் திணறிய வாலி : இந்த ஹிட் பாடல் உருவானது இப்படித்தான்!
1969-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் அடிமைப்பெண். எம்.ஜி.ஆர் தயாரித்து கே.சங்கர் இயக்கிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர்.
எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற அடிமைப்பெண் திரைப்படம் இன்றும் பிரம்மாண்டமாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் ஒரு பாடலுக்காக ஒரு வாரம் எம்.ஜி.ஆர் – கவிஞர் வாலி இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் ஆகியோர் கஷ்டப்பட்டுள்ளனர்.
Advertisment
1969-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் அடிமைப்பெண். எம்.ஜி.ஆர் தயாரித்து கே.சங்கர் இயக்கிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்க, சந்திரபாபு, அசோகன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்., கே.வி.மகாதேவன் இந்த படத்திற்கு இசையமைக்க, வாலி, புலமை பித்தன் உள்ளிட்ட சிலர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இந்த படத்தில் முதலில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், பாதியளவு படப்பிடிப்பு முடிந்துள்ளது. அப்போது ஒருநாள் எடுத்தவரை போட்டு பார்த்த எம்.ஜி.ஆருக்கு படத்தில் திருப்தி இல்லை என்பதால், அதை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, மீண்டும் புதிதாக படமாக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு தான் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒரு காட்சியில், ஜெயயலிதாவை கடத்திச்சென்ற, ஆர்,எஸ்.மனோகர், வலுக்கட்டாயமாக ஒரு பாடலை பாட சொல்லி கேட்பார். அப்போது, எம்.ஜி.ஆா மாறுவேடம் போட்டு வந்து ஒரு பாடலை பாடுவது போன்ற காட்சி. இந்த பாடலை வாலி எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி அவரிடம் கொடுக்கின்றனர். அதே போல் மக்களுக்கு எதாவது தத்துவம் சொல்ல வேண்டும் என்பதால், வரிகளையும் எம.ஜி.ஆர் கூறியுள்ளார்.
அதன்படி முதல் வரி ஏமாற்றாதே ஏமாறாதே என்று வந்தால் சரியாக இருக்கும் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அதற்கு கே.வி.மகாதேவன் டியூன் போடுகிறார். இந்த டியூன் எம்.ஜி.ஆர் வாலி இருவருக்குமே பிடிக்காத நிலையில், கே.வி.மகாதேவன் மாற்றி மாற்றி டியூன் போடுகிறார். ஒரு காட்டத்தில் டியூன் ஓகே. செய்த எம்.ஜி.ஆர் பாடல்களை எழுத சொல்கிறார். அப்போது அவர் சொன்ன இரண்டு வார்த்தைகளை ஏமாற்றாதே, ஏமாறாதே என இரண்டு வார்த்தைகளையும் இரண்டுமுறை போட்டு எழுதியுள்ளார் வாலி.
ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாற்றாதே, ஏமாறாதே இப்படியே வந்தால் நன்றாக இருக்காது வேறு எதாவது யோசியுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, ஒரு வாரமாக கம்போசிங் குழு எப்படி எழுதலாம் என்று தலையை போட்டு பிச்சிக்கொடு இருந்துள்ளனர். அதன்பிறகு கே.வி.மகாதேவனின் உதவியாளர் ஒருவர் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ஏமாறாதே, ஏமாறாதே என்று வைத்துக்கொள்ளலாமா என்று கேட்க, இது எம்.ஜி.ஆருக்கும் பிடித்துள்ளனர்.
அதன்பிறகு அவர் சொன்ன, அந்த வரிகளை வைத்து அடுத்து பல்லவியை எழுதுமாறு கூறியுள்ளார். அப்படித்தான் இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடல் உருவாக ஒருவார காலம் ஆனாலும், அரசியல் நிகழ்வுகளில் இந்த பாடல் இன்றும் பேசப்படும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“