வரலாற்று படத்தில் சண்டைக்காட்சிக்காக உண்மையாகவே தாக்கிய மல்யுத்த வீரரை எதிர்த்து தாக்கிய எம்.ஜி.ஆர் அவரை ஆலேக்காக தூக்கி போட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி முடிந்ததும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவதாக இருந்துள்ளார். நாடக நடிகராக இருந்து திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு, நாயகனாக உயர்ந்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி வெற்றி கண்ட எம்.ஜி.ஆர் முன்னணி இயக்குனர்கள் மட்டுமல்லாமல், பல புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் தனது படத்தில் காட்சிகள் சரியாக வர வேண்டும் என்பதற்காக, எந்த எல்லைக்கும் சென்று நடிக்கும் எம்.ஜி.ஆர், சிங்கத்துடன் சண்டையிடுவது போன்ற காட்சிகளில் கூட உயிரை பனையம் வைத்து நடித்துள்ளார்.
அதேபோல் படத்தில் நடிக்கும்போது சண்டை கலைஞர்கள் மக்கள் மத்தியில் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, ஏராகூடாக ஏதாவது செய்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் எம்.ஜி.ஆர் தயங்கியதே இல்லை. இப்படி ஒரு சம்பவம் காஞ்சித்தலைவன் என்ற படத்தில் நடந்துள்ளது. 1963-ம் ஆண்டு ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் வெளியான படம் காஞ்சித்தலைவன். எம்.ஜி.ஆருடன் பானுமதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.
Advertisment
Advertisements
இந்த படத்தில் வித்தியாசமான எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த எம்.ஜி.ஆர், உண்மையான மல்யுத்த வீரரை சண்டைக்காட்சிக்காக அழைத்து வந்துள்ளார். இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆரின் சண்டையை பார்த்து அருகில் இருந்த பலரும் கைத்தட்டி ரசித்துள்ளனர். இதை கண்டு கோபமான அந்த மல்யுத்த வீரர், உண்மையாகவே சண்டைபோட தொடங்கியுள்ளார். இதை பொறுமையாக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ஒரிஜினலாக அடிக்க தொடங்கியுள்ளார்.
இறுதியில், இந்த மல்யுத்த வீரரை அடித்து அலேக்காக தூக்கி கீழே போட போகும்போது அவர் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டதால், கீழே இறக்கி விட்டுள்ளார். இந்த சண்டைக்காட்சி காஞ்சித்தலைவன் படத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“