'கண்ணை வட்டமிட்டு மயக்குது 5 ரூபா': 5000 ரூபாய் கடன் கவலையில் கண்ணதாசனுக்கு பிறந்த பாடல்
1963-ம் ஆண்டு இயக்குனர் யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் பரிசு. கே.பி.கொட்டாரக்கரா கதையில், ஆரூர்தாஸ் வசனத்தில் வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர்.
1963-ம் ஆண்டு இயக்குனர் யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் பரிசு. கே.பி.கொட்டாரக்கரா கதையில், ஆரூர்தாஸ் வசனத்தில் வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர்.
சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.
Advertisment
அதேபோல் படத்திற்கான சுட்சிவேஷனை சொல்லும்போது அதில் தனது நிலையை பொருத்தி பாடல்கள் எழுதி ஹிட் கொடுப்பதில் வல்லவரான கண்ணதாசன் 5 ரூபாய் வைத்து எம்.ஜி.ஆர். சாவித்ரி ஜோடிக்கு ஒரு பாடலை கொடுத்து அதை அனைவரும் ரசிக்கும் வகையில் ஹிட்டாக்கியுள்ளார்.
1963-ம் ஆண்டு இயக்குனர் யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் பரிசு. கே.பி.கொட்டாரக்கரா கதையில், ஆரூர்தாஸ் வசனத்தில் வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் சாவித்ரி எம்.ஆர்.ராதா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். படத்தில் காவல்துறை அதிகாரியான எம்.ஜி.ஆர், வில்லன் கும்பல் தங்கியிருக்கும் இடத்தில் நோட்டமிடுவதற்காக தினமும் ஒரு ஆற்றை கடந்து செல்வார். அந்த ஆற்றில் படகு ஓட்டிக்கொண்டு இருப்பவர் சாவித்ரி.
அது நாகேஷின் படகு என்றாலும், அவருக்கு தெரியாமல் சாவித்ரி ஓட்டிக் கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் தினமும் அந்த படகில் ஏறி ஆற்றை கடந்து செல்வார். இதற்காக அவர் சாவித்ரிக்கு தினமும் 5 ரூபாய் பணம் கொடுப்பார். நாளடைவில் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் காதலாக மாறுகிறது. சாவித்ரி எம்.ஜி.ஆரை 5 ரூபாய் என்று செல்லமாக அழைக்கிறார். இந்த ஜோடி பாடுவது போன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கேட்கப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுத ஒப்பந்தமாகிறார். படப்பிடிப்புக்கு முன்னதாக பாடல் ரெக்கார்டிங் நடைபெற்றபோது கண்ணதாசனுக்கு இந்த சுட்சிவேஷனை விளக்குகிறார் இயக்குனர். இதை கேட்டு பாடல் எழுத கண்ணதாசன் சிந்திக்கும்போது அவருக்கு ஒரு கஷ்டம் நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு தரவேண்டிய 5 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக செக் கொடுத்ததாகவும், தற்போது தனது அக்கவுண்டில் பணம் இல்லை என்பதால் செக் பவுண்ஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்று யோசிக்கிறார்.
இதை தெரிந்துகொண்ட அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பளரும், இப்படியே இருந்தால் பாடல் நமக்கு கிடைக்காது என்று பேசி, உங்கள் அக்கவுண்டில் 5 ஆயிரம் ரூபாய் இப்போதே போட்டுவிடலாம் நீ்ங்கள் கவலையை விடுங்கள் என்று கூறிவிட்டு, தனது உதவியாளரை அழைத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டுகளாக கொடுக்கிறார். அவர் கொடுத்த அத்தனை கட்டுகளும் 5 ரூபாய் நோட்டு கட்டுகள். இதை பார்த்த கண்ணதாசன் சிந்தித்தார்.
இங்கு இருப்பது 5 ரூபாய் நோட்டுக்கள். நாயகி நாயகனை 5 ரூபாய் என்று செல்லமாக அழைக்கிறாள் என்பதை யோசித்து கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘’ என்ன நினைக்குது ஏதேதோ நினைக்கிது வண்ண வண்ண தோற்றங்கள் 5 ரூபாய்’’ என்ற அந்த பாடல் இப்போதும் ஒரு ரெமான்டிக் பாடலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“