தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்.ஜி.ஆர், தான் ஒரு மலையாளி என்ற விமர்சனத்திற்கு ஒரு பாடல்மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என்பதும், இந்த பாடல் இன்றும் பலதரப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதும் பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர், அப்போது முதல்வராக இருந்த அண்ணா இறந்த பின், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுகிறார். அதன்பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதே சமயம் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு பூவை கிருஷ்ணன் கதை எழுதி இருந்தாலும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள எம்.ஜி.ஆர், தனது கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை திரையில் காட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளா. அதற்காக இந்த படத்தின் திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பனே தனது சொந்த முயற்சியில் எழுதியுள்ளார். மேலும் உதவி இயக்குனராக எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் வேலை செய்த ஏ.ஜெகன்நாதன் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அதேபோல் இந்தி மற்றும் பஞ்சாபி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராதா சலுஜாவை இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்போது, அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை சமாளிக்க முடியாத கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ன தமிழரா அவர் ஒரு மலையாளி என்று கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார். இதனால் அரசியல் மட்டுமல்லாமல் திரைத்துறையிலும் பரபரப்பு ஏற்படுகிறது.
Advertisment
Advertisements
இதை எப்படி எதிர்கொள்வது என்று எம்.ஜி,ஆரே ஒரு கட்டத்தில் யோசித்துக்கொண்டிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் படத்திற்காக வேலைகளை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ற கனியை என் இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று அண்ணா சொன்ன அந்த வார்த்தையையே இந்த படத்திற்கு பெயராக இதயக்கனி என்று வைத்துள்ளனர். படத்தின் பாடல்கள் எழுதும் பணி தொடங்குகிறது. எம்.எஸ்.வி இசையில் புலமைப்பித்தன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
இதில் முதல் பாடலில் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் காட்டப்படும்வழக்கமான அவரின் கொள்கை பாலாக இருக்க வேண்டும் என்று சொல்லி, எம்.ஜி,ஆரை மலையாளி என்று சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பாடல் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்போது எங்கிருந்தோ தமிழகத்திற்கு வரும் காவிரி ஆறு, எங்கிருந்தோ வந்த எம்.ஜி.ஆர் இரண்டையும் ஒப்பிட்டு கவிஞர் புலமைபித்தன் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
அந்த பாடல் தான் ‘’நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், எம்.ஜி.ஆர் மலையாளி என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“