திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைக்கு மாறாக இருந்த ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த நிலையில், தனக்கு பதிலாக டூப் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கி அதில் சிம்மாசனம் அமைந்து அமர்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒரு நாடக நடிகராக இருந்து சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின்னாளில், பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
அவரது படங்கள் வெளியாகும்போது ரசிகர்களுக்கு அந்த நாள் பண்டிகை நாளாக மாறிவிடும். அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக்காட்சிகள் பெயர்பெற்றவை என்றாலும் கூட மக்களுக்கு தேவையாக பல கருத்துக்கள் அடங்கியிருப்பதும் ஒரு காரணம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர் கடைசி வரை தான் படங்களில் மது புகை போன்ற காட்சிகளை தவிர்த்தவர்.
1936-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர் தொடர்ந்து 10 வருட இடைவெளிக்கு பிறகு நாயகனாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் மதுரை வீரன். மதுரை வீரனின் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை யோகானந்த் இயக்கியிருந்த நிலையில், எம்.ஜி.ஆர், பத்மினி இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு இறந்துவிடுவார். மதுரை வீரன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் க்ளைமக்ஸ் கட்சியில், மதுரை வீரன் இறந்து சாமியாகிவிடுவார் என்பது தான் கதை. ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், இது தனது கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், க்ளமேக்ஸ் கட்சியில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதே சமயம், தன்னால் நடிக்க முடியாது என்றாலும் படத்தின் க்ளைமேக்ஸ் கட்சி எனக்கு பிடித்திருக்கிறது. அதனால என்னால் தான் நடிக்க முடியாது. எனக்கு பதிலாக டூப் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“