எம்.ஜி.ஆர் படத்திற்காக வாலி எழுதிய ஒரு பாடலை கேட்ட அறிஞர் அண்ணா, அந்த பாடலில் ஒரு திருத்தம் சொல்ல, வாலி. சரியாகத்தானே இருக்கிறது என்று சொல்ல, அண்ணா மீண்டும் அந்த வார்த்தையை மாற்றுங்கள் என்று கட்டளையாக கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரரான வாலி,ஜெமினி சாவித்ரி நடிப்பில் வெளியான கற்பகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்த படததிற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் மற்றம் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கியள்ளார்.
வாலியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கற்பகம் படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த எம்.எஸ்.வி, அதன்பிறகு பல படங்களில் தனது இசையில அவரை பாடல் எழுத வைத்துள்ளார். அதன்பிறகு எம்.எஸ்.வி தொடர்ந்து தான் இசையமைக்கும் படங்களில், வாலிக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுக்க, அவரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி கவிஞர்கள் வரிசையில் இடம்பெற்றார்.
இதனிடையே கடந்த 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான பெற்றால் தான் பிள்ளையா படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் வாலி எழுதியுள்ளார். அப்போது ஒரு பாடலை எழுதிய வாலி, அதை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அங்கு அறிஞர் அண்ணாவும் இருந்துள்ளார். என்ன வாலி பாடலை கேட்கலாமா என்று அண்ணா கேட்க, கேட்கலாம் என்று வாலி கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரும் பாடலை பாடுங்கள் வாலி என்று சொல்ல, சக்கரக்கட்டி பாப்பாத்தி என்று வாலி தனது பாடலை பாட, இதில் பாப்பாத்தி என்ற வார்த்தையை மாற்றிவிடுங்கள் என்று அண்ணா கூறியுள்ளார். இதை கேட்ட வாலி ஏன் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொன்னாலும், அண்ணா, பாப்பாத்தி என்பதை ராசாத்தி என்று மாற்றிக்கொள்ளுங்கள். நாம் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள கூடாது என்று அண்ணா வாலிக்கு பதில் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“