எம்.எஸ்.வி-ஐ பிரமிக்க வைத்த கண்ணதாசனின் அந்த ஒரு வரி: எம்.ஜி.ஆர் பாட்டில் இதை கவனிச்சீங்களா?
1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அவரே நடித்து வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன். பல நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஒரு படத்திற்காக பாடல் எழுதிய கவியரசர் கண்ணதாசன், தான் ஒழுதிய ஒரு வரியில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை பிரமிக்க வைத்துள்ளார்.
Advertisment
1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அவரே நடித்து வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன். பல நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மஞ்சுளா, லதா, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
படத்திற்கு வாலி, கண்ணதாசன், பாவலர் வேதா உள்ளிட்டோர் பாடல்களை எழுதியிருந்தனர். இந்த படத்தின் பாடல் கம்போசிங்கின்போது, ஒரு பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைத்துள்ளார். இது குறித்து எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, அவரும் சம்மதம் சொல்ல, கண்ணதாசனை சந்தித்துள்ளார் எம்.எஸ்.வி.
இந்த சந்திப்பின் முடிவில் கண்ணதாசன் பாடல் எழுத வருவதாக சொல்ல, அடுத்த நாள் கம்போசிங் தொடங்குகிறது. கண்ணதாசன் ஸ்டூடியோவுக்கு வந்தவுடன், அவருக்கு படத்தின் எம்.எஸ்.வி சூழ்நிலையை விளக்கி சொல்ல, அதை சரியாக புரிந்துகொண்ட கண்ணதாசன், அடுத்தடுத்து பாடல் வரிகளை கூறியுள்ளார். அவர் சொன்ன அத்தனை வரிகளும் எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்துள்ளனர்.
கண்ணதாசன் வரிகளை சொல்லி முடித்தவுடன், கவிஞரே போதுமான அளவு வரிகள் கிடைத்துவிட்டது என்று எம்.எஸ்.வி சொல்ல, விச்சு இதில் நீங்கள் எந்த வரியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால், இந்த வரியை மட்டும் பாடலில் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதை மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அந்த வரிகள் தான், ‘’தழுவிடும் இனங்களில் மான் இனம், தமிழும் அவளும் ஓரினம்’’ என்ற வரியை கூறியுள்ளார்.
இந்த வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் தான் ‘’அவள் ஒரு நவரச நாடகம் என்ற பாடல்’’ இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், குறிப்பாக இந்த பாடல் இன்றும் ரசிக்கும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“