தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று பெயரேடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன், எந்த டியூன் போட்டாலும் பிடிக்கவில்லை, சரியில்லை என்று சொல்லி, அவரை எம்.ஜி.ஆர் அப்செட் ஆகியபோதும், அந்த படத்திற்காக 10-க்கு மேற்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் எம்.எஸ்.வி அது எந்த படம்? எம்.ஜி.ஆர் ஏன் அப்படி செய்தார்?
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவதாக இருந்துள்ளார். நாடக நடிகராக இருந்து திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு, நாயகனாக உயர்ந்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்த எம்.ஜி.ஆர், 1970-களில் அதிமுக கட்சியை தொடங்கினார். அப்போது உலகம் முழுவதும் சிறந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றார்போல் ஒரு கதை தேவை என்று தேடிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதை கிடைத்துள்ளது, இந்த படத்தை படமாக்க, பல தடைகள் வந்துள்ளது. ஆனாலும் மனம் தளராத எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடத்த வெளிநாடுகளுக்கு செல்ல தயாரானார்.
மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க குண்ணக்குடி வைத்திய நாதனை புக் செய்த எம்.ஜி.ஆர் பலரும் அவர் வேண்டாம் என்று சொல்லவே எம்.எஸ்.விஸ்வநாதனை கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். ஆனால் நாம் 2-வது வாய்ப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நினைத்த எம்.எஸ்.வி இந்த படத்தி்ற்கு இசையமைக்க மறுத்தாலும், பிறகு எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்தி அவரை படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார். அதன்படி இசை பணியை தொடங்கிய எம்.எஸ்.வி, காலையில் டியூன் அமைக்க, மதியம் எம்.ஜி.ஆர் வந்து டியூன் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதே சமயம் எம்.எஸ்.வி போட்டி டியூன்கள் அனைத்திற்கும், எம்.ஜி.ஆர் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், தனக்கு பிடிக்காத மாதிரியே நடந்துகொண்டுள்ளார். இதை பார்த்து விரக்தியான எம்.எஸ்.வி, 10 நாட்களில் 15 பாடல்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார். மேலும் இந்த பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. அதனால் நாம் சம்பளம் வாங்க கூடாது என்று நினைத்துள்ளார். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாரானபோது, விநியோகஸ்தர்களை அழைத்து ஆள் உயர மலையை எம்.எஸ்.விக்கு அணிவித்த எம்.ஜி.ஆர் ஒரு பை நிறைய பணம் கொடுத்துள்ளார்.
இதை எதிர்பார்க்காத எம்.எஸ்.வி, டியூன் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. இப்போது இப்படி சொல்கிறீர்களே என்று கேட்க, நீ போட்ட அத்தனை டியூனுமே ப்ரமாதம் விசு. ஆனால் நான் அப்போது நல்லா இருக்கு என்று சொல்லியிருந்தாலும், நீ அத்துடன் விட்டிருப்பாய் ஆனால் இப்போது அதற்கு மேல் முயற்சி செய்து சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறாய் என்று கூறியுள்ளார். தனக்கு வேண்டியதை சிறப்பாக வாங்கிக்கொள்ளும் திறன் எம்.ஜி.ஆருக்கு உண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“