Advertisment

10 நாள் தான் படப்பிடிப்பு... எம்.ஜி.ஆரின் அரசியல் படம் : வெற்றியை கொடுத்ததா?

விஜயா வாஹினி ஸ்டூடியோவில் 14 படப்பிடிப்பு தளங்கள் இருந்துள்ளது. இந்த தளங்கள் அனைத்திரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததுள்ளது.

author-image
WebDesk
New Update
MGR Movie

எம்.ஜி.ஆர் படம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆா நடிப்பில் வெளியான திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தாலும் 10 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவரும் சினிமா துறையில் தனக்கான ஆளுமையை செலுத்தியவருமான எம்.ஜி.ஆர் ஒருமுறை விஜயா வாஹினி ஸ்டூடியோ தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அந்த ஸ்டூடியோவின் நிறுவனர் நாகி ரெட்டியார் எம்.ஜி.ஆர் படத்திற்கான கதையை கேட்டுள்ளார்

இந்த படத்திற்காக எழுத்தாளர் சொர்ணம் பல கதைகளை கூறியுள்ளார். ஆனாலும் நாகி ரெட்டியாருக்கு எந்த கதையும் பிடிக்கவில்லை. இதனால் தற்போது தேர்தல் காலம் அதனால் அரசியல் தொடர்பான கதையை படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எழுத்தாளர் சொர்ணம் சொல்ல, அதை நாகி ரெட்டியாரும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு தெலுங்கில் கதாநாயகடு என்ற படத்தை பற்றி கூறியுள்ளார் சொர்ணம்.

இந்த படத்தை ஒருமுறை பாருங்கள். நன்றாக இருந்தால் அதையே தமிழில் மீண்டும் எடுக்கலாம் என்று சொல்ல, அந்த படத்தை எம்.ஜி.ஆர் நாகி ரெட்டியார் இருவரும் பார்த்துள்ளனர். படம் அவர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அடுத்த நாளே இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் சொர்ணம் ஈடுபட்டுள்ளார். தெலுங்கில் என்.டி.ராமாராவ் நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆர், நடிக்க தெலுங்கில் நடித்திருந்த ஜெயலலிதாவே தமிழிழும் நடித்திருந்தார்.

அப்போது விஜயா வாஹினி ஸ்டூடியோவில் 14 படப்பிடிப்பு தளங்கள் இருந்துள்ளது. இந்த தளங்கள் அனைத்திரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடந்து, அடுத்த நாள் காலை மீண்டும் 6 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுள்ளது. அசோகன், ரங்கராவ், தங்கவேலு, நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர் என பலரும் நடித்த இந்த படம் 10 நாட்களில் முடிந்தது அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதில் எம்.ஜி.ஆர் தொடர்பான காட்சிகளை அவரே பாடமாக்கிய நிலையில், மற்ற நடிகர்களின் காட்சியை படத்தின் இயக்குனர் ஜம்புலிங்கம் இயக்கியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான இந்த படத்தின பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பெயர் நம்நாடு. 1969-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலையும் வாரி குவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment