Advertisment

எம்.ஜி.ஆர் - என்.எஸ்.கே குஸ்தி மோதல்... வென்றது யார்? என்.எஸ்.கே கொடுத்த அறிவுரை

எம்.ஜி.ஆர் - என்.எஸ்.கே இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், இவர்களின் முதல் சந்திப்பு மோதலில் தான் நடந்துள்ளது.

author-image
WebDesk
New Update
MGR NSK1

எம்.ஜி.ஆர் - என்.எஸ்.கே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்தக்கொண்டு இன்றும் பலராலும் கொண்டாப்படக்கூடிய ஒரு தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர். 1918-ம் ஆண்டு பிறந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பே பல நாடகங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.

Advertisment

அதே சமயம் கிடைத்த வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பல சமயங்களில், பசி பட்டினியை அனுபவித்தவர் என்பது பலரும் அறிந்திராத ஒரு உண்மை. 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தில் தான் எம்.ஜி.ஆர் தனி நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு பல படங்களில் நாயகனாக நடித்து முத்திரை பதித்த எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக ஜொலித்தார். சினிமாவை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு முன்னோடி குரு என்ற இடத்தில் இருப்பவர் என்.எஸ்.கிருஷ்ணன்.

அதேபோல் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், இவர்களின் முதல் சந்திப்பு மோதலில் தான் நடந்துள்ளது. நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எம்.கே.ராதா நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் காமெடி ஆக்டராக நடித்திருந்தார்.

சதிலீலாவதி படத்தின்போது எம்.ஜி.ஆர் பல கலைகளை அறிந்திருந்தால், படப்பிடிப்பு தளத்தில் மிடுக்காக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை பார்த்த என்.எஸ்.கே, என்ன இப்படி சுத்திட்டு இருக்க, நீ என்ன பைல்வானா என்று கேட்க, ஆமாம் நான் பைல்வான்தான். வரிங்காளா மோதி பார்க்கலாம் என்று, எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். இதற்கு என்.எஸ்.கே சரி விடுப்பா என்று சொன்னாலும், பரவாயில்லை வாங்க ஒரு முறை மோதி பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட என்.எஸ்.கே, நீ ஹீரோ மாதிரி இருக்க, நான் காமெடி நடிகர் நான் விழுந்தால், காமெடியா இருக்கும், ஆனா நீ விழுந்தா அசிங்கமா போய்டும் பரவாயில்லையா என்று கேட்க, பரவாயில்லை நான் ஒருமுறையாவது உங்களை வீழ்த்த வேண்டும் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். அதை ஏற்றுக்கொண்ட என்.எஸ்.கே, எம்.ஜி.ஆருடன் மோத தயாரான நிலையில், எம்.ஜி.ஆர் வேட்டியை மடித்துக்கொண்டு தயாராகியுள்ளார். அப்போது என்.எஸ்.கே ஒரு அரை நிஜாருடன் மோதருக்கு தயாராகியுள்ளார்.

மோதல் தொடங்கியபோது, எம்.ஜி.ஆர் சட்டென்று, என்.எஸ்.கே-வை, கீழே தள்ளிவிட்டார். இதனால் மகிழ்ச்சியில் நின்றபோது, சட்டென்று எழுந்த என்.எஸ்.கே உடனடியாக எம்.ஜி.ஆரை கீழே தள்ளி, மேலே அமர்ந்துகொண்டார். இதனால் எம்.ஜி.ஆர் தோல்வியை சந்தித்தார். ஆனாலும் அடுத்து மோதலில் என்.எஸ்.கேவை வீழ்த்த வேண்டும் என்று மீண்டும் மோதலுக்கு அழைத்துள்ளார். எம்.ஜி.ஆர் மீண்டும் அழைக்க, அதற்கு என்.எஸ்.கே விடுப்பா என்று சொல்ல, அந்த இடமே காமெடி தர்பாராக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் பாதி கோபம் குறைந்த எம்.ஜி.ஆரிடம், கீழே விழுந்து உடம்பெல்லாம் மண்ணா இருக்கு, நீ போய் குளித்துவிட்டு வா, அதன்பிறகு மோதுவோம் என கூறியுள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர் குளித்துவிட்டு வந்தபோது, சரிதான் தம்பி, சண்டை போடுவது முக்கியமில்லை. நாம பெரிய பலசாளியாக இருக்கலாம் புத்திசாளியாகவும் இருக்கலாம். ஆனால் எதிரியை சாதாரணமாக நினைக்க கூடாது. பலவீனமாக எதிரி கூட, அசந்த நேரம் பார்த்து உங்களை சாய்த்துவிடுவான். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீ நிறைய சாதிக்க வேண்டும் என்றால், நிறைய படிக்க வேண்டும், அதற்கு எதிர்பதமாக வரும் பத்திரக்கைகளையும் படித்துவிட்டு, இரண்டையும் ஒப்பிட்டு எது உனக்கு நியாயமாக படுகிறதோ அதை செய் என்று கூறியுள்ளார். அதன்பிறகு பெரியாரின் குடியரசு பத்திரிக்கையை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார் என்.எஸ்.கே.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr NSk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment