தனது கொள்கையில் இருந்து சிறிதும் பின்வாங்காத கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், ஒரு சில இடங்களில் தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து சமரசம் செய்துள்ளார். அப்படி ஒரு நிகழ்வு எம்.ஜி.ஆர் படத்தில் நடந்துள்ளது.
Advertisment
1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், அஞ்சலி தேவி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சக்ரவர்த்தி திருமகள். பி.நீலகண்டன் இயக்கிய இந்த படத்திற்கு ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ஒரு பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற மாதிரி அமைந்துள்ளது.
இந்த படத்தில் சமூக பிரச்சனைகளை ஒரு மனிதன் பாடும்பாடியான ஒரு பாடலை எழுத பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அவரும், வந்து உட்கார்ந்து பாடல் எழுத யோசிக்கிறார். அப்போது அவர் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஒரு பூனை குவித்து தாவி ஓடுகிறது. அடுத்து ஒரு பானையை உருட்டிவிட்டு செல்கிறது. இதை பார்த்த கவிஞர் பட்டுக்கோட்டை, ‘’உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்’’ என்று முதல் வரியை போடுகிறார்.
அதன்பிறகு அனைத்து வரிகளையும் மளமளவென எழுதி கொடுத்துவிடுகிறார் பட்டுக்கோட்டை. இதில், கடைசியில், ‘’உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால், நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னாள், உளறி என்ன கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை தோழா என்று எழுதியிருப்பார். இதில் நட்டக்கல்லை தெய்வம் என்று சொன்னால் நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னாள்’’ என்று எழுதியிருந்தார். இந்த வரிகளை கவனத்த தயாரிப்பாளர் பதற்றத்தில் பட்டுக்கோட்டையிடம் கேட்டுள்ளார்.
Advertisment
Advertisements
கடவுள் இல்லை என்று வெளிப்படையா சொல்றீங்களே இந்த படம் எப்படி ஓடும் வரிகளை மாற்றி கொடுங்க என்று கூறியுள்ளார். பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரின் மனநிலையை புரிந்துகொண்ட பட்டுக்கோட்டை அதன்பிறகு அந்த வரிகளை உப்புக்கல்லை வைரம் என்று மாற்றி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news