தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி இடத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர் எம்.பி பதவி கொடுக்கிறேன் என்று சொல்லியும், கடைசிவரை தனக்கு அந்த பதிவி வேண்டாம் என்று நடிகை சரோஜா தேவி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 10 வருடங்கள் சினிமாவில் 2-வது ஹீரோவாக நடித்திருந்த எம்.ஜி.ஆர், 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானர்.
அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், திருடாதே படத்தில் சரோஜா தேவியை நாயகியாக மாற்றினார். அதன்பிறகு, தான் இயக்கிய தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில், பானுமதி விலகியதை தொடர்ந்து, 2-வது நாயகியாக சரோஜா தேவியை நடிக்க வைத்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர் தனது படங்களில் சரோஜா தேவிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருடன் இணைந்து நடிப்பதை எம்.ஜி.ஆர் தவிர்த்து வந்தார். இதனிடையே கடந்த 1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சரோஜா தேவிக்கு திருமணமான நிலையில், மருத்துவமனையில் இருந்ததால் எம்.ஜி.ஆர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.
அதேபோல் திருமணம் காரணமாக சரோஜா தேவியும் எம்.ஜி.ஆரை மருத்துவனையில் வந்து எம்.ஜி.ஆரை பார்க்க முடியாத சூழல் இருந்தது. இதனிடையே 1986-ம் ஆண்டு சரோஜா தேவியின் கணவர் ஸ்ரீஹர்ஷா மரணமடைந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் உடனடியாக பெங்களூர் விரைந்து சென்று சரோஜா தேவிக்கு ஆறுதல் கூறினார். மேலும் இது மிகப்பெரிய சோகம். இதை உன்னால் தாக்கிக்கொள்ள முடியாது என்று எனக்கு தெரியும்.
தனிமையில் இருந்து இந்த சோகத்துடன் இருப்பதை விட நீ பொது வாழ்க்கைக்கு வர வேண்டும். உனக்கு விருப்பம் இருந்தால் சொல், நான் உடனடியாக உன்னை ராஜ்யசமா எம்.பி ஆக்குகிறேன் என்று கூறியுள்ளார். இப்போது இருக்கும் நிலையில், என்னால் பொது வாழ்க்கைகும் திரும்ப முடியாது. ராஜ்யசபா எம்.பியாக எனது பணிகளையும் செய்ய முடியாது. அதனால் இப்போதைக்கு வேண்டாம் என்று சரோஜா தேவி எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“