தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களுக்கு இடையே போட்டி இருந்தாலும், அவர்கள் எவ்வளர் நெருக்கமாக இருந்தார்கள் என்பதை சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர், 2-வது நாயகனாக நடித்திருந்த எம்.ஜி.ஆர் 10 வருட போராடத்திற்கு பிறகு சினிமாவில் நாயகனகாக உயர்ந்தார். அதன்பிறகு ஒரு முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்த எம்.ஜி.ஆர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அதே சமயம் நாடக நடிகராக இருந்தாலும், பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன். அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சிவாஜி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரின் படங்களில் நடிப்புகக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இருக்கும். அதே சமயம் எம்.ஜி.ஆர் படங்கள் ஆக்ஷன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வந்தது.
சினிமாவில் வெவ்வேறு காலக்கட்டத்தில் அறிமுகமாகி இருந்தாலும், எம்.ஜி.ஆர் சிவாஜி இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஒரு அற்புத திறமைக்கு சொந்தக்காரர். யாரும் அதை அவரிடம் இருந்து பறித்துவிட முடியாது. அவரைபோல் கத்திச்சண்டை போடுகிறேன் என்று எத்தனைபேர் மூக்கை உடைத்துக்கொண்டார்கள்? அவர்களிடம் எம்.ஜி.ஆர் தன்னிடம் சண்டை போட வேண்டாம் என்று சொன்னாரா?
மற்றவர்களால் இவரை போல் கத்திச்சண்டை போட முடியவில்லை் காரணம் எம்.ஜி.ஆரிடம் அவரின் தனித்திறமையை பார்த்து யாரும் வரவலில்லை. அவரின் தனித்திறமை காரணமாகத்தான் அவரை யாரும் நெருங்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜியின் படங்களுக்கு பாராட்டு தெரிவிக்காமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம். தொழில்முறையில் இருவரின் படங்களும் மோதலில் இருந்தாலும், இருவருககும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது குறிப்பிடத்தகக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“