நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், அரசியலில், முதலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்துகொண்டு, மூகம்பிக்கை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிரலுக்கு சென்றது என எம்.ஜி.ஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்திருந்தாலும், படப்பிடிப்பில் சக நடிகையின் மூலம் ஒரு சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் தான் எம்.ஜி.ஆர். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர், 2-வது நாயகன் என நடித்து வந்த எம்.ஜி.ஆர் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 1947-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்று சில நடிகைகள் மறுத்த சம்பவமும் உள்ளது.
தொடர்ந்து பல தடைகளை கடந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர், இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். முதன் படமாக எம்.ஜி.ஆர் இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் படம் படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்.ஜி.ஆர், தனது படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
இதனிடையே அடிமைப்பெண் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, அந்த படத்தில் நடித்த நடிகை ராஜஸ்ரீ திருப்பதிவுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்த அவர், யூனிட்டில் இருந்த அனைவருக்கும் லட்டு கொடுத்துள்ளார். ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும் லட்டு கொடுக்கவில்லை. இதை கவனித்த எம்.ஜி.ஆர், ராஜஸ்ரீயிடம் எனக்கு ஏன் லட்டு கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட ராஜஸ்ரீ இது கோவில் பிரசாதம், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? லட்டு கொடுத்தால் சாப்பிடுவீர்களா? என்று எனக்கு தெரியாது அதனால் தான் தரவில்லை என்று சொல்ல, எனக்கு பக்தி இல்லை என்று யார் சொன்னது என்று கூறிய எம்.ஜி.ஆர் உரிமையுடன் அவரிடம் இருந்து லட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“