தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கான குரல் கொடுத்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், எம்.ஜி.ஆருக்காக முதன் முதலாக பாடிய ஒரு பாடல் இன்றும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடல் உருவான விதமே மறக்க முடியாத ஒரு அனுபவம் என்று சொல்லலாம்.
நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் நாயகனாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் துணை வேடங்களில் நடித்த அவர், பின்னாளில் பெரிய ஹீரோவாக மாறினாலும், அவரை மாஸ நயகனாக மாற்றிய படம் மலைக்கள்ளன். நாமக்கல் ராமலிங்கம் கதை திரைக்கதை எழுதிய இந்த படத்திற்கு, மு.கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் சார்பில் ஸ்ரீராமுலு நாயுடு படத்தை தயாரித்து அவரே இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் ஒரு பாடலின் பல்லவியை எழுதி முடித்து சரணம் எழுத தொடங்கியுள்ளார். அப்போது இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுடன் இவருக்கு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கோபித்துக்கொண்டு கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் சென்னை திரும்பி விட்டார். அப்போது எம்.ஜி.ஆர் மேக்கப் ரூமுக்கு சென்றபோது ஒரு சிறுவன் இதன் பல்லவியை பாடிக்கொண்டிருந்துள்ளார்.
இந்த பாடலை கேட்ட, எம்.ஜி.ஆர் இந்த பாடலை யார் எழுதியது எந்த படத்திற்காக எழுதியது என்று விசாரித்தபோது கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் நீங்கள் நடித்து வரும் படத்திற்காக எழுதியது என்று கூறியுள்ளனர். மேலும், இசையமைப்பாளருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து கூறியுள்ளனர். இதை கேட்ட எம்.ஜி.ஆர் இந்த வரிகளை விட மனமில்லாத எம்.ஜி.ஆர் கவிஞர் தஞ்சை ராமையா தாஸிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததுள்ளார்.
கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் எவ்வளவோ கேட்டும் முடியாது என்று சொன்னதால், வேறு வழி இல்லாமல், எம்.ஜி.ஆர் இந்த வரிகளை நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கேட்க அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு எஸ்எம்.சுப்பையா நாயுடு, இந்த பல்லவிக்கு டியூன் போட, மீதி சரணங்களை இதற்கு ஏற்றவாறு யாரையாவது வைத்து எழுத சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, கோவையை சேர்ந்த கோவை அய்யா முத்து என்பவரின் ஞாபகம் வந்துள்ளது.
அதன்பிறகு அவரை வரவழைத்த சுப்பையா நாயுடு, பாடலுக்கான சுட்சிவேஷன், மற்றும் பல்லவியை சொல்லி சரணத்தை எழுதுமாறு சொல்ல, அவர் சிறிது நேரத்தில் அனைத்தையும் எழுதி கொடுத்துள்ளார். அப்படி உருவான பாடல் தான் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… இன்றவரை இந்த பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல் தான் டி.எம்.சௌந்திரராஜன் எம்.ஜி.ஆருக்கான பாடிய முதல் பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.