Advertisment
Presenting Partner
Desktop GIF

'மண் குடிசை வாசல் என்றால்...' வாலியின் 2 குயர் நோட்டில் இருந்து எம்.ஜி.ஆர் தேடி எடுத்த பாடல்; பிரம்மாண்ட ஹிட்

பல இசையமைப்பாளர்கள் நிராகரித்த ஒரு பாடலை வாலியின் புத்தகத்தில் இருந்து எழுத்த எம்.ஜி.ஆர் பாடலை பெரிய ஹிட்டாக மாற்றியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vaali and MGR

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, தான் தான் சினிமாவில் பாடல் எழுத தொடங்குவதற்கு முன்பு எழுதிய பல பாடல்களை பார்த்த எம்.ஜி.ஆர் அதில் இருந்து ஒரு பெரிய ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கவிஞர் வாலி. தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான் கவிஞராக மாறியவர் தான் கண்ணதாசன்.

அதே சமயம் கவிஞர் வாலி தனது ஆரம்பகட்டத்தில் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மட்டுமே எழுதியிருந்த நிலையில், தினமும் பல இசையமைப்பாளர்களை சந்தித்து பாடல் எழுத வாய்ப்பு கேட்டு, தான் எழுதி வைத்திருந்த பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால் இந்த பாடல் வெற்றி பெறாது என்று எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட பல இசையமைப்பாளர்கள் தவிர்த்துள்ளர். ஆனாலும் வாலி தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

அதன்பிறகு சினிமாவில் ஒரு கவிஞராக அந்தஸ்தை பெற்றுவிட்டாலும், வாலி தான் கவிஞராக ஆவதற்கு முன்பே எழுதிய அந்த பாடலை மட்டும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி படத்தில் பாடல் எழுத வாலிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த படத்தின்போது படப்பிடிப்பில் கிடைத்த இடைவேளையின்போது, வாலியை சந்தித்த எம்.ஜி.ஆர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் பாடல்கள் எழுதி இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

அப்போது வாலி, பல பாடல்கள் எழுதி இருக்கிறேன். 2 குயர் நோட்டே இருக்கிறது என்று சொல்ல, எம.ஜி.ஆர் அந்த நோட்டை வாங்கி பார்த்துள்ளார். அதில் இருந்து ஒரு பாடலை தேர்வு செய்துள்ளார். இந்த பாடலை பார்த்த வாலி, இந்த பாடலை பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்துவிட்டேன் அவர்கள் இது தேறாது என்று நிராகரித்துவிட்டனர் என்று சொல்ல, இல்லை இல்லை இந்த பாடலை இந்த படத்தில் வைக்கிறோம் என்று சொல்லி டி.எம்.எஸ். குரலில் இந்த பாடலை பதிவு செய்துள்ளனர். இந்த பாடல் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.

பல இசையமைப்பாளர்கள் நிராகரித்த இந்த பாடல் மூலம் எம்.ஜி.ஆருக்கு அஸ்தான கவிஞராக மாறிய வாலி, இறுதி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டார். அவர் எழுதிய அந்த பாடல்தான் ‘’கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்’’ என்ற பாடல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment