சினிமாவில் காலம் காலமாக சம்பிரதாயம் மற்றும் சகுனங்கள் பார்ப்பது தொடர்ந்து வருகிறது. படப்பிடிப்புக்கு பூஜை போடுவதில் இருந்து பாடல்களில் பாசிட்டீவான சொற்கள் இடம்பெறுவது வரை அனைத்துமே சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வாலி எழுதிய ஒரு பாடல் காரணமாக எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஒரு படம் சுமார் 3 வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள நடிகர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், 1967-ம் ஆண்டு இறுதியில் ஒரு படத்தை தொடங்குகிறார். தலைவன் என்ற தலைப்புடன் பூஜை போடப்பட்டு, படத்திற்காக முதல் பாடல் பதிவுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆனால் சில நாட்கள் கழித்து பல்வேறு தடைகள் காரணமாக படப்பிடிப்பு நின்று விடுகிறது.
படத்தின் இயக்குனர் பி.ஏ.தாமஸ் படத்தை தயாரித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் காலியாக, எம்.ஜி.ஆரிடம் பண உதவி கேட்டுள்ளார். எம்.ஜி.ஆரும் முடிந்த அளவுக்கு பணத்தை கொடுத்து உதவி செய்திருந்தாலும், படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் அதிகரித்தே வந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த எம்.ஜி.ஆர், சினிமாவில் கடைபிடிக்கப்படும் ஐதீகத்தை பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி, ஜோசியரிடம் படக்குழுவினர் விசாரித்துள்ளனர். அதன்பிறகு இதுவரை நடந்த படப்பிடிப்பில் அறச்சொல் ஏதாவது வந்துள்ளதா என்று பார்க்க தொடங்கியுள்ளனர். நாம் பேசும்போது எப்போதும் பாசிட்டீவான சொற்களை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நம்மை சுற்ற நல்ல செயல்களாக நடந்து ஒரு பாசிட்டீவ் வைபிரேஷன் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. சினிமாவில் இதை அனைவருமே கடைபிடிப்பார்கள்.
Advertisment
Advertisement
அதன் காரணமாக நெகடீவ் வைபிரேஷ் உருவாகும் வகையில் ஏதாவது சொற்கள் அமைந்துள்ளதா என்று பார்த்தபோது, வாலி எழுதிய பாடலில், தலைவன் வாராமல் காத்திருந்தாள் தலைவி என்று எழுயுள்ளார். தலைவன் வாராமல் என்று எழுதியுள்ளதால், இந்த படம் வெளியாக இவ்வளவு சிக்கல் ஏற்படுகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர், வாலியை அழைத்து இப்படி எழுதியிருக்கிறீர்களே இதை உடனடியாக மாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வாலி அந்த பாடலின் சொற்களை மாற்றி அமைந்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 1967-ம் ஆண்டு தொடங்கிய இந்த படம் 3 ஆண்டுகள் கழித்து 1970-ம் ஆண்டு வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ, அசோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான தலைவர் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“