Advertisment

தந்தி கொடுத்த இயக்குனர்... தீவிரவாதி என கைது செய்த போலீஸ் : சூப்பர் ஸ்டார் இயக்குனர் என்ன செய்தார்?

நாளை படப்பிடிப்பு என்று தந்தி கொடுக்க சென்ற இயக்குனரை தீவிரவாதி என்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
MKT K Subramaniam

எம்.கே.டி - கே.சுப்பிரமணியம்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால் அது எம்.கே.தியாகராஜ பாகவதர் தான். 1934-ம் ஆண்டு வெளியான தனது பவளக்கொடி படத்தின் மூலம் இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம். தமிழ் சினிமாவில் பழம்பெறும் இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இவர், ஒரு தந்தி கொடுக்க சென்று சிக்கலில் மாட்டிக்கொண்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

1934-ம் ஆண்டு பவளக்கொடி படத்தின் மூலம் எம்.கே.தியாகராஜ பாகவதரை அறிமுகம் செய்த இயக்குனர் கே.சுப்பிரமணியம், அடுத்து நவீன சாரங்கதாரா என்ற படத்தை இயக்கினார். பவளக்கொடி படத்தில் நடித்த எம்.கே.தியாகராஜ பாகவதர் எஸ்.டி சுப்புலட்சுமி ஆகியோரை வைத்து இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அந்த காலக்கட்டத்தில் போன் வசதி இல்லாத காரணத்தினால், அடுத்த நாள் ஷூட்டிங்கிற்காக, தந்தி கொடுப்பது தான் வழக்கமாக இருந்தது. அந்த வகையில் கல்கத்தாவில் அடுத்த நாள் படப்பிடிப்பு என்று தந்தி கொடுப்பதற்காக அங்கிருக்கும் போஸ்ட் ஆபீஸ்க்கு சென்ற இயக்குனர் கே.சுப்பிரமணியம், நாளைக்கு ஷூட்டிங் தொடங்கும் என்று ஆங்கிலத்தில் எழுதி, அங்கிருந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

கே.சுப்ரமணியம் கொடுத்த தகவலை வாங்கி படித்த அவர் தனது மேலதிகாரியின் காதில் ஏதோ சொன்னார். அதன்பிறகு நீங்கள் இந்த ஊர் தானே என்று கேட்க, இல்லை நாள் வெளியூர் என்று கே.சுப்பிரமணியம் சொல்ல, ரசீது போட கொஞ்சம் தாமதமாகும் அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று அவரை ஒரு அறையில் உட்கார வைத்துள்ளனர். அரைமணி நேரம் ஆகியும் ரசீது வராத நிலையில், நேரம் ஆகிவிட்டது நான் போக வேண்டும் என்று கே.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் ஆயுதம் தாக்கிய காவலர்களுடன் போலீஸ் சில அங்கு வந்துள்ளனர். கே.சுப்ரமணியத்தை சோதனை செய்த போலீசார், அவரை கமிஷ்னர் ஆபீஸ்க்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம், இந்த தந்தி நீங்கள் கொடுத்தது தானா என்று கேட்க, ஆமாம் என்று கே.சுப்பிரமணியம் பதில் கூறியுள்ளார். அதன்பிறகு, நீ்ங்கள் படிச்சவர் தானே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் செத்தால் உங்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரியாத என கேட்டுள்ளார்.

அப்போது தான் ஷூட்டிங் என்ற வார்த்தையை அவர் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்பது கே.சுப்பிரமணியத்திற்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு தான் ஒரு இயக்குனர் என்பதையும் ஷூட்டிங் என்றால் படப்பிடிப்பு என்பதையும் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார். ஆனாலும் அந்த கமிஷ்னர் நம்பாத நிலையில், படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்துள்ள ஈஸ்ட் இந்தியா ஸ்டூடியோவின் நம்பரை கொடுத்து பேசுமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அந்த ஸ்டூடியோவுக்கு போன் செய்து கேட்டபோது உண்மையை தெரிந்துகொண்ட கமிஷனர் அவரை விடுவித்துள்ளார். ஒரு தந்தி கொடுக்க போன இயக்குனரை தீவிரவாதி என்று நினைத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment