Advertisment
Presenting Partner
Desktop GIF

கே.எஸ்.கே. முதல் நாடகம்... கையில் பீடி, தீப்பெட்டியுடன் மேடை ஏறிய எம்.ஆர்.ராதா : என்ன நடந்தது?

நாடகத்தை பாராட்டி பேசுவதற்காக மேடை ஏறிய நடிகர் எம்.ஆர்.ராதா ஒரு கையில் பீடி மறு கையில் தீப்பெட்டியுடன் பேச தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
MR Radha

நடிகர் எம்.ஆர்.ராதா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் இயக்குனர் திலகம் என்று போற்றப்படுபவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிவாஜி நடிப்பில் பல படங்களை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் இயக்குனராக ஆவதற்கு முன்பு நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞராக திகழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்துவிட வேண்டும் என்று இவருக்கு ஆசை.

Advertisment

என்.எஸ்.கிருஷ்ணனை பார்க்க கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பலமுறை முயற்சித்தும் அவரை சந்திக்க முடியவில்லை. அந்த நேரத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய எழுத்தாளன் என்ற நாடகத்தை தனது சக்தி நாடக சபா மூலமாக நடத்துவதற்காக, என்.ஏ.நடராஜன் என்பவர் அனுமதி பெறுவதற்காக சந்தித்துள்ளார். அவர் அனுமதி கேட்டவுடன் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நாடகம் நடைபெறும் அரங்கத்திலும் தனது பங்களிப்பை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நாடகம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஒருநாள் யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் எம்.ஆர்.ராதா இந்த நாடகத்தை பார்க்க வந்துள்ளார். இவர் வந்ததை தெரிந்துகொண்ட என்.ஏ.நடராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும், மகிழுந்த மகிழ்ச்சியில் இருந்தது. மேலும் நாடகம் முடிந்தவுடன் அவரை அழைத்து நாடகத்தை பற்றி பேச சொல்வோமா? நாம் கேட்டுக்கொண்டால் அவர் பேசுவாரா என்று இருவருமே யோசித்துக்கொண்டிருந்தபோது, நாடகம் முடிந்தவுடன் பேசுவதற்காக அனுமதி கேட்டு எம்.ஆர்.ராதாவே ஒருவரை அனுப்பியுள்ளார்.

இந்த நபர் வந்து எம்.ஆர்.ராதா பேச ஆசைப்படுகிறார் என்று சொன்னதும், இவர்கள் இருவரும் மேலும் மகிழ்ச்சியடைந்தனர். நாடகம் முடிந்தபின் பேசுவதற்ககா மேடை ஏறிய எம்.ஆர்.ராதா ஒரு கையில் பீடி ஒரு கையில் தீப்பெட்டியுடன் பேச தொடங்கியுள்ளார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும் பேச தொடங்கிய எம்.ஆர்.ராதா, இந்த நாடகத்தை தொடங்கும்போது பீடி பிடிக்கலாம் என்று எடுத்தேன். ஆனால் நாடகம் விறுவிறுப்பாக சென்றதால், கடைசிவரை இந்த பீடியை என்னால் பிடிக்க முடியவில்லை. இதைவிட இந்த நாடகத்தை பற்றி நான் என்ன சொல்லிவிட முடியும் என்று பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நாடகம் முடிந்த ஒரு சில நாட்கள் கழித்து, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை தேடி என்.எஸ்.கிருஷ்ணன் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இப்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வீட்டில் இல்லாததால் அவர் வந்தவுடன் எனக்கு போன் செய்ய சொல் என்று தனது விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இதை தெரிந்துகொண்டு நேராக என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசித்த இவர், என்.எஸ்.கே வெளியில் வருவதை பார்த்து உள்ளே சென்றுள்ளார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் யார் என்றே என்.எஸ்.கேவுக்கு தெரியாத நிலையில், நான் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று சொல்ல, என் எழுத்தாளன் நாடகம் சிறப்பாக இருந்தது என்று எம்.ஆர்.ராதா உன்னை பற்றிதான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தான். அவன் எல்லோரையும் திட்டுவான் அதிகம் பாராட்டமாட்டான். ஆனால் உன்னை பாராட்டி இருக்கிறான். அதனால் தான் அந்த எழுத்தாளன் நாடகத்தை என் வாயால் பாடிக்க சொல்லி கேட்கலாம் என்று வர சொன்னேன் என்று சொல்ல, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

N S Krishnan M R Radha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment