தமிழ் சினிமாவில் நடிகர் திகலம் என்று போற்றப்படும் முக்கிய நடிகர் சிவாஜி. நாடக நடிகராக இருந்து 50-களில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இவர், க்ளாசிக் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர்.
திரைப்படங்களில் தான் பேசும் வசனங்களில் மட்டுமல்லாமல் உடல் மொழியிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்திய சிவாஜி நடிகர் திகலம் என்று அழைக்கப்பட்டார். அவரை நடிப்பைதான் இன்றைய நடிகர்கள் பலரும் ஃபாலே செய்து வருகின்றனர். மேலும் தனது இறுதி காலம் வரை நடிப்பில் தனக்கான தனி அடையாளத்தை காட்டிய சிவாஜி, 7 வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நாடக சபையில் சேர்ந்தவர்.
மதுரையில் ஸ்ரீபாலகனா நாடக சபையில் சின்ன பொன்னுசாமி என்பர் சிவாஜிக்கு நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளார். இந்த நாடக குழு பல ஊர்களில் நாடகங்கள் நடத்தினாலும் சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது இந்த நாடக குழு பரமக்குடிக்கு வரும்போது பொன்னுசாமி பொள்ளாச்சியில் இருந்து தனக்கு பழக்கமான எம்.ஆர்,ராதாவை வந்திக்கிறார்.
பரமகுடி நாடக காண்ட்ராக்டர் தொல்லை தருவதாகவும், பேசியபடி பணத்தை கொடுக்கவில்லை. நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று சொல்ல, இதை கேட்டு எம்.ஆர்,ராதா பரமக்குடி செல்கிறார். ஏற்கனவெ சில படங்களில் நடித்து பிரபலமான எம்.ஆர்.ராதாவை பார்த்த அந்த காண்டராக்டர் அவரை வரவேற்று பேசுகிறார், ரொம்ப நாடகளாக இங்கே நாடகம்போடுவதால் பெரிதாக வசூல் ஆகவில்லை. அதனால் நாமக்கல் செல்லலாம் என்று சொல்கிறார்.
எம்.ஆர்.ராதாவின் பேச்சுக்கு காண்ராக்டர் சம்மதம் சொன்னதை தொடர்ந்து, அவரை முன் சென்று அனுமதி வாங்குங்கள் என்று சொல்லி பொன்னுசாமியை அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு நாடக குழுவை அழைத்துக்கொண்டு சேலம் சென்ற எம்.ஆர்.ராதா பின்னர் அங்கிருந்து நாமக்கல்லில் நாடகம் போட கிளம்புகிறார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதாவும் நடிக்க நாடகம் 100 நாட்களை தாண்டி ஓடுகிறது.
இதனால் அந்த நாடக குழுவுக்கும் குழுவில் இருந்த சிவாஜிக்கும் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. பின்னாளில் சினிமாவில் அறிமுகமான சிவாஜி எம்.ஆர்.ராதாவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“