தமிழ் சினிமாவில், முற்போக்கு சிந்தனைகளுடன் படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஆர்.ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில், காமெடி, குணச்சித்திரம், ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த இவர், பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ள எம்.ஆர்.ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தபோதும் நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். அந்த வகையில் ஒருமுறை ராமாயனத்தை கிண்டல் செய்து ஒரு நாடகத்தை நடத்தியிருந்தார்.
இந்த நாடகத்தை பார்த்த பலரும், இது தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி வந்த நிலையில், ஒரு சிலர், எம்.ஆர்.ராதாவிடமே நாடகம் எங்களுக்கு மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று புகார் கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட எம்.ஆர்.ராதா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து வித்தியாசமாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அதன்படி,இந்த நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் வராலம். ஆனால் இந்த நாடகத்தால் தங்கள் மனம் புண்பட்டுள்ளதாக உணரும் எவரும் இந்த நாடகத்தை பார்க்க வர வேண்டாம். அவர்களின் காசு எனக்கு தேவையில்லை. இதை பொருட்படுத்தாமல் நாடகத்தை நீங்கள் பார்க்க வந்து உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்.
எம்.ஆர்.ராதாவின் இந்த போஸ்டர் நாடகம் நடைபெற்ற ஊர் மற்றும் அக்கம் பக்கத்து ஊர்களில் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முற்போக்கு சிந்தனையுடன் எம்.ஆர்.ராதா அன்று எடுத்த இந்த முடிவை, இன்றைய காலக்கட்டத்தில் செய்தால் எப்படி இருக்கும்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“