தமிழ் க்ளாகிச் சினிமாவில் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்தவர் தான் எம்.ஆர்.ராதா. அதேபோல் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கிய நடிகரும் அவர் தான். இப்படி பல பெருமைகள் கொண்ட எம்.ஆர்.ராதா ஒரு மெகாஹிட் படத்தில் விருப்பம் இல்லாமல் நடித்தும் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது பலரும் அறியாத ஒரு தகவல்.
1954-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் ரத்த கண்ணீர். 1949-ம் ஆண்டு திருவாரூர் கே.தங்கராஜ் எழுதிய ரத்த கண்ணீர் என்ற நாடகத்தை திரைப்படமாக எடுத்த நிலையில், எம்.ஆர்.ராதா இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு, பின்னணி இசை எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்திருந்தனர்.
பாடல்களுக்கு சி.ஆர்.சுப்புராமன் இசைமைத்திருந்தார். பெருமாள் முதலியார் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தின் கதையை எம்.ஆர்.ராதாவிடம் சொல்லும்போது அவர் ஒரு லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். நந்தனார் படத்திற்காக கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியதே அதிகபட்சமாக இருந்துது. இந்த படத்தின் மூலம் எம்.ஆர்.ராதாவும் அந்த பட்டியலில் இணைந்தார்.
மேலும் படத்தை ஒரு வருடத்திற்குள் முடித்துவிடுவோம் என்று எம்.ஆர்.ராதவிடம் சொல்லி தான் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாகியும் படப்பிடிப்பு முடியவில்லை. இதனால் எம்.ஆர்.ராதா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நிலையில், ஒரு வருடத்தில் படத்தை முடிப்பதாக சொல்லி இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அதனால் சம்பளம் அதிகமாக கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு, தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் சினிமா பிரபலங்களை அழைத்து ரத்த கண்ணீர் படத்தை எடுத்தவரை அவர்களுக்கு போட்டு காட்டி, எம்.ஆர்.ராதாவை சமாதானம் செய்யாலம் என்று யோசித்து அதன்படி சினிமா பிரபலங்களுக்கு படத்தை திரையிட்டுள்ளனர். படத்தை பார்த்த அவர்கள், இந்த படத்தை இத்தோடு விட்டுவிடுவது தான் நல்லது. இந்த முகத்தை யார் பார்ப்பார் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.
அவர்களின் இந்த பேச்சை பொருட்படுத்தாத பெருமாள் முதலியார் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று நேரடியரக எம்.ஆர்.ராதாவை சந்தித்து நிலைமையை எடுத்து சொல்லி, சம்பளம் உயர்த்தாமல் நடித்து தரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் எடுத்தவரை படத்தை பார்த்த எம்.ஆர்.ராதா தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்தது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எம்.ஆர்.ராதா என்ற பெயரை சொன்னாலே சட்டென்று நினைவுக்கு வரும் முதல் படமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“