பணத்திற்கு திண்டாடிய கண்ணதாசன்; டைமிங்காக எம்.எஸ்.வி பெயரில் பிறந்த பாட்டு
அமெரிக்காவின் ஜனாதிபதி குறித்து கேட்க, அப்போதும் எம்.எஸ்.வி தெரியாது என்று சொல்ல, உலக பணக்கார நாடு அமெரிக்கா அது பற்றியே உனக்கு தெரியவில்லையா என்று கண்ணதாசன் கேட்டுள்ளார்
அமெரிக்காவின் ஜனாதிபதி குறித்து கேட்க, அப்போதும் எம்.எஸ்.வி தெரியாது என்று சொல்ல, உலக பணக்கார நாடு அமெரிக்கா அது பற்றியே உனக்கு தெரியவில்லையா என்று கண்ணதாசன் கேட்டுள்ளார்
வேலை இல்லாமல் பண நெருக்கடியில் இருந்தபோது, ஒரு படத்தற்காக பாடல் எழுத சென்ற கவியரசர் கண்ணதாசன், தனது நெருங்கிய நண்பராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயரையெ பாடலாக மாற்றி ஹிட் பாடலை கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1959-ம் ஆண்டு வெளியாக காதல் பரிசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீதர். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்காத இயக்குனராக ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்தே பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான படம் தான் காதலிக்க நேரமில்லை.
பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் முத்துராமன், காஞ்சனா, ராஜாஸ்ரீ, சச்சு, நாகேஷ், பாலையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் நடைபெறும்போது எம்.எஸ்.வி மற்றும் கண்ணதாசன் ஆகிய இருவரையும் ஒரு அறையில் விட்டுவிட்டு, இவர்கள் பேசுவதை வைத்து பாடல் எழுதலாம் என்று இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் தயாரிப்பாளர்கள் பக்கத்து அறையில் இவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுகொண்டு இருந்துள்ளனர். அப்போதுர், உலக நடப்புகள் குறித்து கண்ணதாசன் எம்.எஸ்.வியிடம் கேட்க, எப்போவும்போது எம்.எஸ்.வி தனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறிவிடுகிறார்.
Advertisment
Advertisements
அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி குறித்து கேட்க, அப்போதும் எம்.எஸ்.வி தெரியாது என்று சொல்ல, உலக பணக்கார நாடு அமெரிக்கா அது பற்றியே உனக்கு தெரியவில்லையா என்று கேட்க, எனக்கு இசை பற்றித்தான் தெரியும். இப்போது அமெரிக்காவில் ஒரு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலை பாடுகிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த பாடலை பாடியுள்ளார். இதை பக்கத்து அறையில் இருந்து கேட்ட இயக்குனர் ஸ்ரீதர் நல்லாருக்கே இதையே இந்த பாடலுக்கு டியூனாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு பாடல் வரிகளை கண்ணதாசனிடம் கேட்க, அவரோ விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். அப்போது இந்த படத்தில் உங்களுக்கு இது ஒரு பாட்டு தான். இதை முடித்தவிட்டு நான் அடுத்த கம்போசிங் போக வேண்டும் சீக்கிரம் பல்லவி சொல்லுங்க கவிஞரே என்று எம்.எஸ்.வி கேட்க, ஒரு பாடல் தானா?, இந்த பெங்களூர் போய் எல்லா காசும் செலவாகிவிட்டது. ஸ்ரீதர் படத்தில் பாடல் எழுதி சம்பாதிக்கலாம் என்று வந்தால் நீ ஒரு பாட்டுதான்னு சொல்றீயே என்று கேட்டுள்ளார் கண்ணதாசன்.
அதன்பிறகு விசு எனக்கு வேலை கொடுடா என்று கேட்க, பக்கத்து அறையில் இருந்து வந்த ஸ்ரீதர், இது நல்லாருக்கு இதையே பல்லவியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அப்படி உருவான பாடல் தான் காதலிக்க நேரமில்லை படத்தில் இடம் பெற்ற விஸ்வநாதன் வேலை வேண்டும் என்ற பாடல். இந்த படத்தில் வரும் விஸ்வநாதன் என்ற கேரக்டருக்கு வேறு பெயர் இருந்த நிலையில், கண்ணதாசன் எழுதிய பாடலுக்காகவே அவரது பெயரை விஸ்வாநாதன் என்று மாற்றியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“