விருப்பம் இல்லாத தயாரிப்பாளர்: அடம் பிடித்த எம்.எஸ்.வி; தேசிய விருது பெற்ற பாடல் உருவான விதம்!
பாடல் காட்சி வேண்டாம் என்ற தயாரிப்பாளரிடம் கெஞ்சி அந்த பாடல் காட்சியை படமாக்க வைத்துள்ளார் எம்.எஸ்.வி. இந்த பாடலுக்காக பி.சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
ஏ.வி.எம் தயாரித்த ஒரு படத்தில் பாடல் காட்சி படமாக்க நேரம் இல்லை என்று கைவிட இருந்த நிலையில், இந்த பாடலை கண்டிப்பாக படமாக்க வேண்டும் என்று எம்.எஸ்.விஸ்வநாதன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கெஞ்சி அந்த பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த பாடலை பாடியதற்காக பி.சுசீலாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தனது இசையின் மூலம் வெற்றிகளை கொடுத்துள்ள எம்.எஸ்.வி தனது பிடிவாதத்தின் மூலம் பாடகி பி.சுசீலாவுக்கு தேசிய விருதை பெற்று கொடுத்துள்ளார்.
1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், சிவக்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் அவர் சிவாஜியுடன் நடித்த முதல் படம் இதுவாகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா ஆகிய இருவரும் அனைத்து பாடல்களையும் பாடியிருந்தனர். இந்த படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் 2-வது இடத்திற்கான விருதை வென்றிருந்த நிலையில்,‘’நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா’’ என்ற பாடலை பாடியதற்காக பாடகி பி.சுசீலாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தேசிய விருது பெற்ற முதல் பெண்மணி என்ற அயைாளத்தை பெற்றார்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முந்த பிறகு, இந்த பாடல் காட்சி மட்டும் படமாக்க வேண்டி இருந்தது. ஊட்டியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில், அங்கு இந்த பாடலை படமாக்க சூழ்நிலை ஒத்துவரைவில்லை. இதனால் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இந்த பாடல் வேண்டாம். இந்த பாடல் இல்லாமல் படத்தை வெளியிடலாம் என்று சொல்ல, எம்.எஸ்.வி – இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் இந்த பாடலை படமாக்க வேண்டும் என்று ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்பிறகு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஒப்புக்கொண்ட நிலையில், ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் செட் அமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கடைசியில் எந்த பாடலை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வேண்டாம் என்று சொன்னாரோ அந்த பாடலுக்கு தான் தேசிய விருது கிடைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“