முருகன், சிவன் உள்ளிட்ட கடவுகளுக்கு பாடல்கள் இருப்பது போன்று, கண்ணனுக்கு பாடல்கள் இல்லை என்பதால் எங்களுக்கு 8 பாடல்கள் வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் சொல்ல, 2 மணி நேரத்தில் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதி கொடுக்க, 2 நாட்களில் அந்த 8 பாடல்களையும் எம்.எஸ்.வி பதிவு செய்து கொடுத்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் முன்னணி கவிஞராக பல ஹிட் பாடல்களை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பல வெற்றிப்பாடங்களை கொடுத்துள்ளனர். இந்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் வந்த பாடல்கள் தான் கண்ணன் பற்றிய பாடல்கள்.
ஏ.வி.எம். நிறுவனத்திற்கு கண்ணன் பற்றிய பாடல்கள் வேண்டும் என்று தோன்றியபோது, கவியரசர் கண்ணதாசனை தொடர் கொண்டுள்ளனர். அவரோ நாளை எனது கல்யாணமண்டபத்திற்கு வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். மறுநாள் ஏ.வி.எம்.குமரன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கல்யாண மண்டபத்திற்கு சென்றபோது, நடுஹாலில் கண்ணதாசன் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த ஏ.வி.எம் என்ன இந்த டைம்ல வர சொல்லிருக்காரு என்று யோசித்துள்ளார்.
அப்போது கண்ணதாசன், கல்யாண விருந்து அதுதான் கொஞ்சம் அசதியாக இருக்கு என்று சொல்ல எப்படி இன்று பாட்டு கிடைக்குமா என்று குமரன் யோசித்துள்ளார். ஆனால் எம்.எஸ்.வி அவர் கண்டிப்பாக எழுதிவிடுவார் என்று சொல்ல, கண்ணதாசன் உங்களுக்கு எப்படி பாடல் வேண்டும் என்று கேட்க, கண்ணன் பாட்டு அது எப்படி இருந்தாலும் சரிதான் என்று சொல்ல, 8 பாட்டுக்கும் பேமண்ட் இப்போவே வேண்டும் எனக்கு கொஞ்சம் அவசரம். கிடைக்குமா? பாடலை இப்போது முடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கண்ணதாசன் வார்த்தையை கேட்ட குமரன், இதற்காக இல்லை நான் பேமண்டை வீட்டில் கொடுக்க சொல்கிறேன் என்று சொல்ல, கண்ணதாசன் 2 மணி நேரத்தில் 8 பாடல்களையும் எழுதி கொடுத்து வியக்க வைத்துள்ளார். இந்த பாடல்களை பார்த்த எம்.எஸ்.வி இதை எப்படி பதிவு செய்ய போகிறேன் என்று தெரியவில்லையே என்று நினைத்து, உங்களுக்கு பாட்டு எப்போ வேண்டும் என்று கேட்க, நாளைக்கே கொடுத்தாலும் ஓகே தான் என்று குமரன் கூறியுள்ளார். அதன்பிறகு ஒரு ஸ்டூடியோவை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளார்.
2 நாட்கள் இரவு பகலாக ரெக்கார்டிங் செய்து 8 பாடல்களையும் கொடுத்துள்ளார் எம்.எஸ்.வி இந்த பாடல் இன்றும் பக்தி பாடல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளனர். குறிப்பாக எப்எம் ரேடியோவில் காலையில், பக்தி பாடல்கள் ஓடும்போது கண்டிப்பாக இந்த 8 பாடல்களில் ஒரு பாடல்கள் ஒலிக்கும். இந்த 8 பாடல்களில் ஒன்றுதான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.