திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரமுகரான நீல நாராயணன் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பி கதையை தயார் செய்துள்ளார். இந்த படத்திற்கு கண்ணதாசனை பாடல்கள் எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதை கேட்ட கண்ணதாசனும் ஒப்புக்கொண்ட நிலையில், உங்களை சந்திக்க எங்கள் அலுவலகத்தில் இருந்து உங்களை சந்திக்க இருவர் வருவார்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்தார். கண்ணதாசனை சந்திக்க வந்த அவர்கள் இருவரும் நாங்கள் தயாரிக்கும் புதிய படத்திற்கு நீங்கள் தான் பாடல்கள் எழுத வேண்டும் என்றும் அதற்காக முதலாளி இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று கூறி ரூ20 பைசா நாணயத்தை கொடுத்துள்ளார். ஆனால் அப்போது அதை பார்க்காத கண்ணதாசன் அவர்கள் சென்றபின் அந்த நாணயத்தை திருப்பி பார்த்துள்ளார்.
அப்போது தான் அது ரூ20 பைசா நாணயம் என்று தெரிந்துள்ளது. என்ன இப்படி கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள் என்று யோசித்த கண்ணதாசன், இது ஒரு செண்டிமெண்ட போல இருக்கு என்று நினைத்து உடனடியாக இசையமைப்பாளர் எம்.எஸ்.விக்கு போன் செய்துள்ளார். விசு, நீல நாராயணன் கம்பெனியில் இருந்து வந்து பாடல் எழுத என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அவர்கள் முன்பணமாக ரூ20 பைசா கொடுத்திருக்காங்க. அடுத்து உன்னை தான் ஒப்பந்தம் செய்ய வரதா சொன்னாங்க.
அவர்கள் ரூ20 பைசா நாணயம் கொடுத்தால் வாங்கிக்கொள் அது அவர்களின் செண்டிமெண்ட் போல இருக்கு என்று சொல்ல, எம்.எஸ்.வி அந்த நாணயத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்துள்ளார். கண்ணதாசன் சொன்னபடி அவர்கள் இருவரும் வந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டு, அவரிடம் தங்க காசு கொடுத்துள்ளனர். இதை பார்த்த கண்ணதாசன் என்ன கவிஞர் இப்படி சொன்னாரே என்று யோசித்துள்ளார்.
அதே சமயம் அவர்களிடமே கண்ணதாசனிடம் ரூ20 பைசா நாணயம் கொடுத்தது குறித்து கேட்டபோது தான் அவர்களுக்கெ விஷயம் புரிந்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் தங்க காசு ரூ20 பைசா நாணயம் இரண்டுமே ஒரே வடிவத்தில் இருந்ததால் குழப்பத்தில் 20 பைசா நாணயத்தை கொடுத்ததை புரிந்துகொண்டு உடனடியாக கண்ணதாசன் வீட்டுக்கு சென்று அந்த நாணயத்திற்கு பதிலாக தங்க காசுவை கொடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“