Advertisment

'பட்டுக்கோட்டையை நான் அப்படி செய்திருக்கக் கூடாது': சாப்பிட மறுத்து கண்ணீர் விட்டு அழுத எம்.எஸ்.வி

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ஒரு பெரிய ஹிட் பாடலை நிராகரித்த எம்.எஸ்.வி, அதற்காக சாப்பிடாமல், தூங்காமல் அழுதுகொண்டே இருந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MSV Pattukkottai

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். அப்போது மாடர்ன் தியேட்டர் நிறுவனம் சார்பாக பாசவலை என்ற திரைப்படம் தாயாராகிறது. இதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். இந்த படத்தின் நாயகன் எம்.கே.ராதா ஒரு மன்னர். மன்னனின் சகோதரன் ஒரு பெண் மீது ஆசைப்பட்டு தவறு செய்யும்போது மாட்டிக்கொள்கிறான்.

Advertisment

மக்கள் மன்னரிடம் நியாயம், கேட்க மன்னர் தனது சகோதரனாக இருந்தாலும் தண்டிக்கிறேன் என்று சொல்லி சகோதரனை தேடுகிறார். ஆனால் அவர் தப்பித்து ஓடிவிட்டார். சகோதரனை தப்பிக்க வைத்ததே மன்னர் தான் என்று மக்கள் கோபமடைகின்றனர். இதை பார்த்து ஆத்திரமடையும் மன்னர், தனது பதவியை விட்டுவிட்டு வனவாசம் சென்றுவிடுகிறார். அப்போது மன்னனுக்கு தாகம் எழுப்பதால் ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறார். ஆனால் திருடர்கள் பயம் காரணமாக ஆடுமேய்க்க வருபவர்கள் அனைவரும் குளத்தில் விஷத்தை கலந்துவிடுகின்றனர். இந்த தண்ணீரை குடித்த மன்னர் மயங்கிவிடுகிறார். 

ஆடு மேய்கிறவர்கள் இவரை காப்பாற்றினாலும் இவருக்கு சுயநினைவு இல்லாமல் பைத்தியமாக மாறிவிடுகிறார். அப்போது ஓடிப்போன தம்பி திரும்பி வந்து மன்னிடம் மன்னிப்பு கேட்டாலும் மன்னருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி டியூன் போடுகிறார். ஆனால் உடுமலை நாராயணன், மருதகாசி, கண்ணதாசன் இவர்கள் அனைவரும் எழுதிய எந்த பாடலும் செட் ஆகவில்லை. 

இதை பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றும் சுலைமான் உடனடியாக இது குறித்து பட்டுக்கோட்டையாருக்கு தகவல் கொடுக்கிறார். இதற்காக சென்னையில் இருக்கும் பட்டுக்கோட்டையார் நண்பர்கள் உதவியுடன் சேலம் வருகிறார். அதன்பிறகு சுலைமான் சுட்சிவேஷனை சொல்ல பட்டுக்கோட்டை பாடலை எழுதுகிறார். அதன்பிறகு எம்.எஸ்.வியிடம் செல்லும் சுலைமான் பட்டுக்கோட்டையார் குறித்து சொல்லி பாடல் எழுதியதை பற்றி சொல்கிறார். ஆனால் அனுபவ கவிஞர்களே திணறும்போது புது பையன் என்ன செய்வான் என்று சொல்லி மறுத்துவிடுகிறார்.

அடுத்த நாள் கவிஞர்கள் அனைவரும் பாடல் எழுதுகின்றனர். எந்த பாடலும் எம்.எஸ்.விக்கு பிடிக்கவில்லை. மீண்டும் சுலைமான் பட்டுக்கோட்டை குறித்து சொல்ல எம்.எஸ்.வி. மீண்டும் மறுத்துவிடுகிறார்.  3-வது நாள் எம்.எஸ்.வி விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அப்போது சுலைமான் மீண்டும் வந்து பட்டுக்கோட்டையின் பாடலை கொடுக்கிறார். அப்போவும் திட்டி அனுப்பும் எம்.எஸ்.வி சில நிமிடங்கள் கழித்து கொண்டுவா பாப்போம் என்று சொல்லி அந்த பாடல் வரிகளை படித்து பார்க்கிறார்.

அதை படித்து எம்.எஸ்.வி கண்ணீர் விடுகிறார். எந்த சுட்சிவேஷனுக்கு இவர் பாடல் எழுத முடியாமல் டியூன் வராமல் திணறினாரே அதற்கு இந்த பாட்டு கச்சிதமாக பொருந்தியுள்ளது. அந்த பாடல் தான் உனக்கும் சொந்தம் எனக்கும் சொந்தம் உலகத்தற்கு எதுதான் சொந்தமடா என்ற பாடல். உடனடியாக இந்த பாடருக்கு டியூன் போட்ட எம்.எஸ்.வி ரெக்கார்டிங்கு அனுப்பிவிட்டு இந்த பாடலை எழுதிய பையனை கூட்டிகிட்டு வா என்று சொல்கிறார்.

அவரை பார்த்த எம்.எஸ்.விக்கு பிடித்துவிடுகிறது. அதன்பிறகு எம்.எஸ்.வி அந்த பாடலை பதிவு செய்துவிட்டு, உடனாயடிகா தனது அறைக்கு சென்று சாமி படத்தின் மூன்பு அமர்ந்துள்ளார். ஆண்டவா எனக்கு இவ்வளவு கர்வத்தை கொடுத்துவிட்டாயே.. ஒரு கவிஞர் பாடலை என்ன என்று கூட பார்க்காமல் 3 நாட்கள் அவரை காக்க வைத்துவிட்டேனே, ஏன் இந்த அளவுக்கு எனக்கு தலைகணத்தை கொடுத்தாய் என்று கேட்டு அழுதுள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் எம்.எஸ்.விளை சாப்பிட அழைக்க, அவர் தன்னால் அப்போது சாப்பிட முடியாது என்று கூறிவிட்டு அழுதுள்ளார். அதன்பிறகு இனி யார் வந்தாலும் அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நான் முதலில் பார்க்க போகிறேன் என்று கூறியுள்ளார் எம்.எஸ்.வி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

M S Viswanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment