எம்.எஸ.விஸ்வநாதன் இசையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய ஒரு பாடலை ரெக்கார்டிங் முடிந்து வீட்டுக்கு எடுத்து சென்று கேட்ட எம்.எஸ்.வி எமோஷனலாக நள்ளிரவில் எஸ்.பி.பி.க்கு போன் செய்து பேசியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில், இவருக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது பிள்ளை போல் எஸ்.பி.பியை பார்த்துக்கொண்ட எம்.எஸ்.வி, தனது இசையில் எஸ்.பி.பி பாடிய ஒரு பாடலை நள்ளரவில் கேட்டுவிட்டு, அவருக்கு போன் செய்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். 1978-ம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் நிழல் நிஜமாகிறது. கமல்ஹாசன் ஷோபா இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
Advertisment
Advertisements
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில், கண்ணதாசன் எழுதிய இலக்கணம் மாறுதோ என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு முடிந்தவுடன், கேசட்டில் வீட்டுக்கு எடுத்து சென்ற எம்.எஸ்.வி திரும்ப திரும்ப அந்த பாடலையே கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பாடலை கேட்டு எமோஷ்’னல் ஆன எம்.எஸ்.வி, அந்த நேரத்தில் பாலுவுக்கு போன் போடு என்று சொல்லி, எஸ்.பி.பி வீட்டுக்கு போன் செய்து அவரிடம் பேசியுள்ளார்.
அப்போது நன்றாக பாடியிருக்கீங்க பாலு, நீங்க எல்லாம் நல்லா பாடி எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்குறீங்க என்று கூறியுள்ளார். பல மேடை கச்சேரிகளிலும் எம்.எஸ்.வி எஸ்.பி.பி குறித்து இதே வார்த்தைகளை கூறியுள்ளார் என்று அவரது மகன் பிரகாஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“