தனது மெல்லிசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உலகம் அறிந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தாலும், சிறுவயதில், இவரை வெறுத்த அவரது அம்மா, தன்னுடன் சேர்ந்து எம்.எஸ்.வியை தற்கொலை முடிவுக்கு தூண்டியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் மெல்லிசை மன்னர் என்று பெயரேடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து இன்றுவரை போற்றப்படும் பல அரிய பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாரளாக இன்றுவரை போற்றப்படுகிறார்.
இவரது பாடல் மற்றும் இசையமைக்கும் பாணி உள்ளிட்ட பணிகளை பார்த்து பலரும் இவரிடம் பாடல் பாட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள எம்.எஸ்.வி, உலக புகழ் பெற்றிருந்தாலும், அவரது சிறுவயது வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்றாலும், எம்.எஸ்.வி சிறுவயதாக இருக்கும்போதே அவரது அப்பா இறந்துள்ளார்.
பொள்ளாச்சியில் சாலை அமைக்கும் காண்ட்ராக்டராக இருந்த எம்.எஸ்.வியின் தந்தை அந்த வேலையை விட்டு விட்டு, சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றபோது இந்துவிட்டதால், அவரது குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. அப்படி இறந்த அடுத்த 15 நாட்களில் எம்.எஸ்.வியின் சகோதரியும் இறந்துள்ளார். ஒரு நேரத்தில் அப்பா சகோதரி என ஒரே நேரத்தில் இருவர் மரணத்தால், எம்.எஸ்.வி பிறந்த நேரம் சரியில்லை என்று கூறி அவரது அம்மா அவரை வெறுத்துள்ளார்.
அதே சமயம், எம்.எஸ்.வி தாத்த அவரை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இப்படி இருக்கும்போது ஒருநாள், அதிகாலை 4 மணிக்கு எம்.எஸ்.வியை எழுப்பிய அவரது அம்மா, ஒரு பாழும் கிணற்றிற்கு அழைத்து சென்று, நாம் தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி ஏன் என்று கேட்க, நமக்கு வருமானம் இல்லை குடும்ப வறுமை என்று கூறியுள்ளார். நான் பெரிய ஆளாக வந்து சம்பாதித்து உன்னை காப்பாற்றுகிறேன் அம்மா என்று எம்.எஸ்.வி சொன்னாலும் அதை ஏற்காத அவர் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
இவர்கள் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் இவர்களை பின் தொடர்ந்து வந்த எம்.எஸ்.வியின் தாத்தா, இவர்கள் கிணற்றில் குதிப்பதற்கு முன்பு தடுத்து இருவரையும் கன்னத்தில் அறைந்து நான் இருக்கும்போது எப்படி நீங்கள் இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கலாம் என்று கட்டுவிட் அதன்பிறகு இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அன்று அந்த தாத்தா வராமல் இருந்திருந்தால், இன்று நமக்கு பல அற்புதமாக பாடல்கள் கிடைத்திருக்காது என்பது உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“