க்ளாசிக் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள சந்திரபாபு, ஒரு சில படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில், ஆங்கில நடிகருக்கு இணையாக காமெடியில் அசத்திய முக்கிய நடிகராக இருப்பர் சந்திரபாபு.
எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நெருக்கம் காட்டிய சந்திரபாபு, தனது கடைசி காலத்தில், தனது நெருங்கிய நண்பர்களின் அரவணைப்பில் இருந்துள்ளார். இந்த நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், எம்.எஸ்.வி வீட்டுக்கு சமையல் அறை வரை செல்லும் அளவுக்கு அவரது குடும்பத்தினருடனும் நட்பில் இருந்துள்ளார் சந்திரபாபு.
அதேபோல் அவ்வப்போது ஆங்கில படங்களுக்கு அழைத்து செல்லும் வழக்கத்தை வைத்திருந்த சந்திரபாபு, ஒரு கட்டத்தில் எம்.எஸ்.வியின் காஸ்டியூம் டிசைனராக மாறியுள்ளார். பொதுவாக, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வேட்டி சட்டையுடன் செல்வது தான் எம்.எஸ்.வி வழக்கம். அவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் அதே உடையில் சென்றதை பார்த்த சந்திரபாபு, இனிமேல் நீ வேட்டி சட்டை அணி கூடாது. பேட்ண்ட் கோட் போட்டு பழகு என்று கூறியுள்ளார்.
அவரின் பேச்சை கேட்ட எம்.எஸ்.வி, அவ்வப்போது விழாக்களுக்கு சென்றால் பேண்ட் சர்ட் அணிவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார். அந்த பேண்ட் சர்ட்களை டிசன் செய்து தருபவராக சந்திரபாபு இருந்துள்ளார். அந்த வகையில் ஒருமுறை, கவியரசர் கண்ணதாசனுடன் எம்.எஸ்.வி ரஷ்யாவுக்கு சென்றபோது, கோட் சூட் டிசைன் செய்து கொடுத்துள்ளார் சந்திரபாபு. அந்த உடையை போட்டுக்கொண்டு எம்.எஸ்.வி சென்றுள்ளார். இது போன்று மாற்று உடை அணியும்போது அவரை கிண்டல் செய்வது கண்ணதாசனின் வழக்கம்.
அந்த வகையில் ரஷ்யா சென்றபோது எம்.எஸ்.வி அணிந்திருந்த கோட் சூட் உடையை பார்த்த கண்ணதாசன், இது என்னடா கத்தரிக்காய்க்கு கால் முளைத்த மாதிரி இருக்கு. இதெல்லாம் உனக்கு செட் ஆகாது. நீ மெட்ராஸ் போனதுக்கு அப்புறம் பழையபடி வேட்டி சட்டைக்கே மாறிவிடுவடு. இது உனக்கு நல்லா இல்லை என்று கூறியுள்ளார். இந்த தகவலை எம்.எஸ்.வி மகன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“