எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.வி, ஒரு பாடலில் செய்த தவறை சுட்டிக்கட்டிகவிஞர் ஒருவர் அவரை அறைந்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்
Advertisment
க்ளாசிக் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், தனது இசையால் பல வெற்றிகளை குவித்திருந்தாலும், பல பாடல்களில் தனது இசை ஜாலத்தை கொடுத்து வித்தியாசம் காட்டியிருப்பார். அதேபோல் இசையில் பல வித்தைகளை கொண்டுவந்த எம்.எஸ்.வி, எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கேரளாவில் பிறந்திருந்தாலும், தமிழ் சினிமாவில், தனது இசையால் பல வெற்றிகளை கொடுத்த எம்.எஸ்.வி, தனது ஆரம்பகட்டத்தில், கவிஞர் உடுமலை நாராயணகவியின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்புராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். நடிக்க வேண்டும் என்று வந்த எம்.எஸ்.வி தனது இசையால் பல நடிகர்களை நடனமாட வைத்திருந்தார்.
சி.ஆர்.சுப்புராமனிடம் உதவியாளராக பணியாற்றியபோது, அவர் இளம் வயதிலேயே மரணமடைந்துவிட்டார். இதனால் அவர் ஒப்புக்கொண்ட பல படங்கள் பாதியிலேயே நின்ற நிலையில், இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.வியை இசையமைக்க கேட்டுக்கொண்டுள்ளனர். அதே சமயம், ராமமூர்த்தியுடன் இணைந்து இந்த படங்களுக்கு இசையமைக்கிறேன் என்று எம்.எஸ்.வி ஒப்புக்கொண்டு படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார்.
Advertisment
Advertisements
அப்படி அவர்கள் இசையமைத்த படம் தான் தேவதாஸ். காதல் தோல்வியில் இருக்கும் பலருக்கும் இந்த பாடல் இன்றும் ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தில் வரும் ‘’உலககே மாயம் வாழ்வே மாயம்’’ என்ற பாடல் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இந்த பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்த நிலையில், இந்த பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி, பாடல் பதிவு முடிந்தவுடன், தனது குருவான உடுமலை நாராயணகவியிடம் கொண்டு சென்று ஐயா உங்கள் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த பாடலை கேட்ட உடுமலை நாராயணகி, ஏன் தமிழை கொல்லுறீங்க என்று கேட்டு, பளார் என்று அறைந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் இந்த பாடலை பாடிய பாடகர், கண்டசாலாதான். தெலுங்கு பாடகரான இவர், தமிழை சரியாக கற்றுக்கொள்ளாமல் பாடியதால் தான் உடுமலை நாராயணகவி அவ்வாறு செய்துள்ளார்.
அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக எம்.எஸ்.வி மாறியிருந்தாலும், தனது வாழ்நாளின் கடைசிவரை உடுமலை நாராயணகவி குறித்து எந்த இடத்திலும் பேசியதே இல்லை என்பது வரலாறு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“