தனது குருநாதர் இசையமைத்த ஒரு படத்தில் பாடல்கள் பதிவின்போது ஒரு பாடலை சரியாக பாடாததால், பாடலை பதிவு செய்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி கன்னத்தில் அறைந்துள்ளார் ஒரு கவிஞர் அவர் யார் அது என்ன பாடல் என்பதை பார்ப்போம்.
Advertisment
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி. இவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர் சிவாஜி, முத்துராமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்திற்கு தங்களது இசையின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்தாலும் எம்.எஸ்.வி தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக திகழ்ந்தார்.
சிறுவயதில் இருந்தே இசையில் பெரிய நாட்டம் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவர் உதவியாளராக பணியாற்றிய ஒரு இசையமைப்பாளர் தான் சி.ஆர்.சுப்புராமன். 1943-ம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கிய இவர், 1952-ம் ஆண்டு தனது 36 வயதில் மரணமடைந்தார். திடீரென அவர் இறந்துவிட்டதால், அவர் இசையமைக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர்.
அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் தேவதாஸ். 1853-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாகேஷ்வரராவ், சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் ஒரு பாடல், உலகே மாயம் வாழ்வே மாயம் என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்ற பாடலாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த பாடலை கண்டலாசா வெங்கடேஷ்வரராவ் பாடியிருந்தார். உலகே மாயம் என்று தொடங்கும் இந்த பாடலை, உல்கே மாயம் வாழ்வே மாயம் என்று கண்டசாலா பாடியுள்ளார்.
அவர் தவறாக பாடுகிறார் என்று எம்.எஸ்.வி எடுத்து சொல்லியும், அவர் அதே மாதிரி பாடியதால், தான் ஒரு அறிமுக இசையமைப்பாளர் அவர் முன்னணி பாடர் இதற்கு மேல் அவரிடம் எதுவும் சொல்ல முடியாது என்பதால், எம்.எஸ்.வி உல்கே மாயம் என்றே பாடலை பதிவு செய்துள்ளார். அந்த வழியாக வந்த கவிஞர் உடுமலை நாராயண கவி, இந்த பாடலை கேட்டுவிட்டு, என்னடா தமிழை சரியில்லாமல் பாடியிருக்கிறான் அப்படியே பதிவு செய்திருக்கிறாய் என்று எம்.எஸ்.வி கன்னத்தில் பளார் என்று அடித்துள்ளார். இதை எதிர்பாராத எம்.எஸ்.வி அந்த அடி இன்னும் எனக்கு வலிக்கிறது என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“