Advertisment

உதவின்னா அது இப்படி இருக்கணும்: எம்.எஸ்.வி போட்ட மெட்டை மீண்டும் ஹிட் ஆக்கிய இளையராஜா

எம்.எஸ்.வி இசையமைத்த மெட்டை வைத்து இளையராஜா 2 ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MSV Ilayaraja

இளையராஜா - எம்.எஸ்.வி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க்ளாசிக் சினிமாவில் முன்னணி இசையமைப்பாரளாக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ஒரு பாடலை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு அதே மாதிரியான 2 பாடல்களை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

Advertisment

70-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பளராக உருவான இவரை தேடி பல இயக்குனர்கள் படையெடுக்க தொடங்கினர். 1990களில் ஏ.ஆர்.ரஹ்மான் என்டரி ஆவதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசை.

படத்தின் போஸ்டரில் இசை இளையராஜா என்று இருந்தாலே இந்த படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்த காலக்கட்டத்தில் எம்.எஸ்.வி இளையராஜாவுடன் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்த படம் தான் மெல்ல திறந்தது கதவு. 1986-ம் ஆண்டு ஏ.வி.எம்.தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன், அமலா, ராதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று இயக்குனர் சுந்தர்ராஜன் இளையராஜாவிடம் கேட்டபோது, நானும் எம்.எஸ்.வி அண்ணாவும் சேர்ந்து தான் இசையமைப்போம் சம்மதமா என்று கேட்டுள்ளார். இதை கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்த சுந்தர்ராஜன் ஓகே சொல்ல, இளையராஜா எம்.எஸ்.வியிடம் சென்று சம்மதம் வாங்கியுள்ளார். அப்போது எம்.எஸ்.வி கடன் சிக்கலால் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால், அவருக்கு கை கொடுக்கும் விதமாக இளையராஜா இதை செய்துள்ளார்.

படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும்போது, இளையராஜத, அண்ணே உங்க குருநாதர் சி.ஆர்.சுப்புராமன் 1953-ம் ஆண்டு வெளியான சண்டராணி படத்தில் இசையமைத்த வான்மீதிலே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் ஒரு டியூனை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி, அந்த பாடலை அவர் உருவாக்கவில்லை. நான் தான் உருவாக்கினேன். அந்த படம் பாதி முடியும் முன்பே சி.ஆர்.சுப்புராமன் இறந்துவிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை அனுகியதால் அவர் விட்டுச்சென்ற பணியை நான் செய்தேன். அந்த பாடல் நான் உருவாக்கியது தான் என்று கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா அப்படியா அண்ணே என்று ஆச்சரியமாக கேட்டுவிட்டு, அதேபோல் ஒரு டியூனை நானும் உருவாக்குகிறேன் என்று ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். அந்த பாடல் தான் மெல்ல திறந்தது கதவு படத்தில் இடம் பெற்ற ‘’வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே’’ என்ற பாடல்.

வாலி எழுதிய இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி பாடியிருந்தனர். படத்தில் இந்த பாடல் சிறிய மாற்றங்களுடன் 2 முறை வரும். அதில் ஒருமுறை எஸ்.பி.பி பாட ஜானகி ஹம்மிங் மட்டும் கொடுத்திருப்பார். அதன்பிறகு 2-வது பாடலை எஸ்.ஜானகியே முழுவதுமாக பாடியிருப்பார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

M S Viswanathan Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment