கண்ணதாசன் காதல் பாடல்களுக்கு அற்புதமாக இசைமைத்து வெற்றிகளை குவித்துள்ள எம்.எஸ்.விஸ்வாதன் – ராமமூர்த்தி இசையில், ஆண்டவன் கட்டளை படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வித்தியாசமான பாடல் தான் ‘’கண்ணிரெண்டும் மின்ன மின்ன’’ என்ற பாடல்.
Advertisment
கே.சங்கர் இயக்கத்தில், 1964-ம் ஆண்டு வெளியான படம் ஆண்டவன் கட்டளை. சிவாஜி கணேசன், ஏ.வி.எம்ராஜன், தேவிகா, புஷ்பலதா, அசோகன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த நிலையில், படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற அமைதியான நதியினிலே ஓடம் என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு இணையாக வரவேற்பை பெற்ற மற்றொரு பாடல் தான் கண்ணிரெண்டும் மின்ன மின்ன என்ற பாடல். ஏ.வி.எம்.ராஜன் – புஷ்பலதா இணைந்து நடனமாயுள்ள இந்த பாடலை காதல் ததும்ப வரிகளை அமைத்து அசத்தியிருப்பார் கண்ணதாசன்.
குறிப்பாக இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் சாத்தனூர் டேம். தண்ணீர் கொட்டும் அருவி போல் காட்சியளிக்கும் அந்த ஆபத்தான இடத்தில் இந்த படலை படமாக்கியிருப்பார்கள். இந்த பாடலில் ஒருசில காட்சிகளில் புஷ்பலதா தவறி தண்ணீரில் விழுந்துவிடுவாரோ என்று நினைக்க தோன்றும் அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்கள். பி.பி.ஸ்ரீனிவாஸ் எல்.ஆர்,ஈஸ்வரி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர்.
மேலும் வழக்கத்திற்கு மாறாக ஆண் குரலை தாழ்த்தியும், பெண் குரலை உயர்த்தியும் வித்தியாசமான முறையில் பதிவு செய்யபட்டுள்ள இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சாத்தனூர் அணையின் அழகை இந்த பாடலில் சரியாக படம்படித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“