க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் ஒரே நேரத்தில் நடித்து வந்த இரு படங்களுக்கு கண்ணதாசன் – வாலி எழுதிய இரு பாடல்கள் ஒரே மாதிரி அமைந்துள்ளது. இந்த இரு படங்களுக்கும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி தான். இந்த சூழ்நிலையை எம்.எஸ்.வி எப்படி கையாண்டார்?
க்ளாசிக் சினிமாவில் முன்னணி முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதில் எம்.ஜி.ஆரின் ஒளி விளக்கு மற்றும் சிவாஜியின் லட்சுமி கல்யாணம் ஆகிய படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து எம்.எஸ்.வி சொன்னதாக நெல்லை ஜெயந்தா ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் ஒளி விளக்கு. இந்த படத்திற்கு இசையமைத்தபோது டியூன் ரெடி ஆகியுள்ளது. அப்போது ஒருநாள் கவிஞர் வாலி அந்த டியூனுக்கு பாடல் எழுதி எம்.எஸ்.வியிடம் காட்டாமல் நேராக ஒளி விளக்கு ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆரிடம் சந்தித்து பாடலை காட்டியுள்ளார். இந்த பாடலை படித்து பார்த்த எம்.ஜி.ஆர்,பாடல் வரி அருமையாக இருக்கிறதே என்று பாராட்டியுள்ளார்.
அதன்பிறகு எம்.எஸ்.வியிடம் பாடலை காட்டியபோது, அந்த பாடல் பிடிக்கவில்லை. வரியை மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி, எம்.ஜி.ஆருக்கு பாடல் பிடித்துவிட்டது என்று என்று சொல்ல, நீ பாடல் எழுதி முதலில் என்னிடம் தானே கொடுக்க வேண்டும். என்னிடம் சொல்லாமல் அவரிடம் ஏன் கொண்டு சென்றாய் என்று வாலியிடம் கேட்டுள்ளார் எம்.எஸ்.வி. இதற்கு வாலி பதில் சொல்லாமல் இருந்துள்ளார்.
அதே சமயம் கடைசி வரை நான் இந்த பாட்டுக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இது குறித்து எம்.ஜி.ஆர் கேட்டபோது, சிவாஜியின் லட்சுமி கல்யாணம் படத்தில் ‘’யாரடா மனிதன் இங்கே’’ என்று ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி இசையில் பாடல் ரெக்கார்டு ஆகியுள்ளது. இந்த இரண்டு பாடல்களுக்கும் டிஎம்எஸ் தான் பாடியுள்ளார் முதலில் சிவாஜி படத்தில் பாடிவிட்டு அடுத்து இந்த படத்தில் பாட வேண்டும் என்று சொல்ல, கண்ணதாசனை சந்தித்து பாடலை மாற்ற சொல் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இது குறித்து எம்.எஸ்.வி, கண்ணதாசனிடம், போய் பாடலை மாற்றி தருமாறு கேட்க, இது நானே தயாரித்து பாடல் எழுதி இருக்கிறேன். அதனால் பாடலை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, இந்த இரு பாடல்களிலும், மனிதன் என்ற சொல்தான் பொதுவாக உள்ளது. மற்றபடி எதுவும் இல்லை. அதனால் பார்த்துக்கொள்வோம் பாடலை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.